யானைகள் நலவாழ்வு முகாமில் பொங்கல் திருவிழா உற்சாகக் கொண்டாட்டம் - உறியடி உள்ளிட்ட கிராமிய விளையாட்டுகளில் யானைகள் பங்கேற்று அசத்தியதை கண்டு வியந்த சுற்றுலாப் பயணிகள்

Jan 16 2015 7:57AM
எழுத்தின் அளவு: அ + அ -
யானைகள் நலவாழ்வு முகாமில் பொங்கல் திருவிழா உற்சாமாக கொண்டாடப்பட்டது. தமிழர் திருநாளில் களைகட்டும் உறியடி உள்ளிட்ட கிராமிய விளையாட்டுகளில் யானைகளும் போட்டி போட்டுக் கொண்டு விளையாடியது சுற்றுலாப்பயணிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

மக்களின் முதல்வர் செல்வி ஜெயலலிதா வழிகாட்டுதலின்படி செயல்படும் தமிழக அரசு சார்பில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பவானி ஆற்று கரையோரத்தில் கடந்த மாதம் 11-ம் யானைகள் நலவாழ்வு முகாம் தொடங்கியது. அங்கு தங்கியுள்ள பிரபல கோயில்கள் மற்றும் மடங்களைச் சேர்ந்த 30 யானைகள் நாள்தோறும் பல்வேறு உடற்பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதுடன், ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் சத்தான உணவுகளம் வழங்கப்படுகின்றன.

மேலும், கால்நடை மருத்துவர்களும் யானைகளின் ஆரோக்கியத்தை பேணி காத்து வருகின்றனர். இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதிகாலையில் பவானி ஆற்றில் நீராடிய 30 யானைகளும் அங்குள்ள கோயில் முன்பு அணிவகுத்து நின்றன. பொங்கல் வைக்கப்பட்டவுடன், மலைக்கோட்டை தாயுமானவர் கோயில் யானை லட்சுமி, மணியடித்து பூஜை செய்தது, சுற்றுலாப் பயணிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

பொங்கல் படையலுக்குப் பின்னர் யானைகளுக்கு பிடித்தமான கரும்பு, வெல்லம், அன்னாசிபழம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. இதனைத்தொடர்ந்து, கிராமிய விளையாட்டுகளான உறியடித்தல், கபாடி, இசை நாற்காலி, பானை உடைத்தல், சாக்குப் போட்டி உள்ளிட்டவற்றில் உற்சாமாக கலந்துகொண்ட யானைகள், கைதேர்ந்த விளையாட்டு வீரர்களைப் போல போட்டி போட்டுக் கொண்டு விளையாடியது, விழாவின் முத்தாய்ப்பாக அமைந்தது.

இதன் பின்னர், பழனி கோவில் யானை கஸ்தூரி, 60 பாகன்கள் மறுபக்கமும் நிற்க, கயிறு இழுக்கும் போட்டி நடைபெற்றது. அனைத்து பாகன்களும் தங்கள் முழு வலிமையையும் காட்டி கயிறு இழுக்க முற்பட்ட போது, ஒரு இழுப்பில் கயிற்றை இழுத்து, அனைத்து பாகன்களையும் கஸ்தூரி மண்ணை கவ்வ வைத்தது, பார்வையாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. பின்னர், வெற்றி பெற்ற யானைகளுக்கும், அதன் பாகன்களுக்கும் இந்து சமய அறநிலையத்துறை இணை இயக்குனர் திரு. இளம்பரிதி பரிசுகளை வழங்கினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00