உலக இஸ்லாமியர்களை நெகிழச் செய்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் ரமலான் நோன்பு கஞ்சிக்கான அரிசி திட்டம் - தமிழகத்தை பின்பற்றி பாகிஸ்தானிலும் செயல்படுத்த வேண்டும் என அந்நாட்டு பிரதான தொலைக்காட்சிகள் செய்தி வெளியீடு

Jun 19 2015 7:11AM
எழுத்தின் அளவு: அ + அ -

புனித ரமலான் நோன்புக்காக கஞ்சி தயாரிக்க, தமிழகம் முழுவதும் உள்ள 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களுக்கு 4 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் அரிசி வழங்கும் தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் உன்னதத் திட்டத்தை, பாகிஸ்தான் அரசும் பின்பற்ற வேண்டும் என அந்நாட்டின் புகழ்பெற்ற Samaa news, Awaz Today உள்ளிட்ட தொலைக்காட்சிகள் அறிவுரை வழங்கியுள்ளன. முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதாவுக்கு பாகிஸ்தான் தொலைக்காட்சிகள் மிகுந்த பாராட்டு தெரிவித்துள்ளன.

முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு, மனித நேயத்திற்கு இலக்கணமாகவும், சமத்துவத்தின் அடையாளமாகவும், மதச்சார்ப்பற்ற அரசை எப்படி வழிநடத்திச் செல்லவேண்டும் என்பதற்கு இந்தியா மட்டுமின்றி, உலகத்திற்கே முன்னுதாரணமாகவும் திகழ்கிறது. முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தலைமையிலான அரசு, அனைத்து மதத்தினருக்கும், அனைத்துத் தரப்பினருக்கும், பாகுபடின்றி பல்வேறு நலத்திட்டங்களையும், உதவிகளையும் வழங்கி வருகிறது. இஸ்லாமியப் பெருமக்களின் புனித மாதமான ரமலான் மாதம் முழுவதும், தமிழகத்தில் உள்ள பள்ளிவாசல்களில் நோன்பு கஞ்சி தயாரிக்க அரிசி வழங்கும் திட்டத்தை, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா கடந்த 2001-ம் ஆண்டு அறிமுகப்படுத்தினார். அப்போது முதல் இத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியப் பெருமக்கள் பெரிதும் பயனடைந்து வருகிறார்கள்.

ரமலான் நோன்பு கஞ்சி தயாரிக்க, மொத்த ஒதுக்கீடாக, அனைத்து பள்ளிவாசல்களுக்கும் 4 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் அரிசி வழங்க முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆணையிட்டிருப்பதற்கு, பாகிஸ்தான் நாட்டின் பிரபலமான Samaa news தொலைக்காட்சிபுகழாரம் சூட்டியுள்ளது. உலகில் வேறு எங்கும் இல்லாத வகையில், தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த உன்னத திட்டத்தை, பாகிஸ்தான் அரசும் பின்பற்றவேண்டும் என்று Samaa news தொலைக்காட்சி அறிவுரை வழங்கியுள்ளது. இதுதொடர்பாக, நீண்ட விவாதமும் நடத்தப்பட்டு, அறிஞர்களின் கருத்துகளும் கேட்கப்பட்டன. மேலும், தமிழக முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதாவின் நல்ல திட்டங்களை பாகிஸ்தான் அரசு கற்றுக்கொள்ளவேண்டும் எனவும் Samaa news தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

மேலும் இதுகுறித்த விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற பாகிஸ்தானைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் ஒருவர் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு தனது சிரம்தாழ்ந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்தார்.

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் மனிதநேய திட்டத்தை Awaz Today என்ற பாகிஸ்தான் தொலைக்காட்சியும் வெகுவாகப் பாராட்டியுள்ளது. முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, ரமலான் நோன்பு காலத்தில் பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்கி வருவதன் மூலம், இஸ்லாமியப் பெருமக்கள் எந்தவித சிரமமுமின்றி, ரமலான் பண்டிகையை கொண்டாடி வருவதாகத் தெரிவித்துள்ள Awaz Today தொலைக்காட்சி, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, ரமலான் பண்டிகைக்காக இஸ்லாமியப் பெருமக்களுக்கு வாழ்த்துகள் தெரிவிப்பதோடு நின்றுவிடாமல், இஸ்லாமியப் பெருமக்கள் ரமலானை சிறப்பாக கொண்டாட செயல் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பாராட்டியுள்ளது.

முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதாவின் சிந்தனையில் உதித்து, செயல் வடிவம் பெற்றுள்ள அம்மா உணவகத் திட்டத்தை, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களும், எகிப்து உள்ளிட்ட உலக நாடுகளும் ஏற்கெனவே வெகுவாகப் பாராட்டியுள்ள நிலையில், ரமலான் நோன்பு கஞ்சி தயாரிக்க, ஆண்டுதோறும் பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்கும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் உன்னதத் திட்டம், பாகிஸ்தானில் மட்டுமின்றி, உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00