இந்தியாவிலேயே முதல்முறையாக கோவையில் அமையவுள்ள பூச்சிகள் அருங்காட்சியகம் - காட்சிப்படுத்தப்படவுள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பூச்சி இனங்கள்

Aug 17 2015 10:47AM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்தியாவிலேயே முதல்முறையாக கோவையில் அமையவுள்ள பூச்சிகள் அருங்காட்சியகத்தில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பூச்சி இனங்கள் பார்வைக்கு வைக்கப்படவுள்ளன.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் சார்பில், கோவையில் பூச்சிகள் அருங்காட்சியகம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுமார் 3 மாதங்களில் அமையவிருக்கும் இந்த அருங்காட்சியகத்தில் இந்தியா மட்டுமின்றி, பங்களாதேஷ், இலங்கை, தாய்லாந்து, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் அதிகமான பூச்சி இனங்களும், ஒட்டுண்ணிகளும் இந்த அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்படுகின்றன. தாவர பாதுகாப்பு மற்றும் ஆய்வு மையம் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இவற்றை சேகரித்துள்ளன. 5 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமையும் இந்த அருங்காட்சியகத்தில் பூச்சி இனங்கள் குறித்த ஒலி - ஒளி வசதியும் பார்வையாளர்களுக்காக ஏற்பாடு செய்யப்படுகிறது. தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக உதவியுடன் அமைக்கப்படும் இந்த பூச்சிகள் அருங்காட்சியகம், வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு பூச்சிகளால் ஏற்படும் பிரச்னைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வுக்கு வழி கிடைக்க வகை செய்யும் என தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் தாவர பாதுகாப்பு மற்றும் ஆய்வு மையத்தின் பொறுப்பு இயக்குனர் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00