வெளிநாட்டுத் தலைவர்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலக பிரமுகர்கள், பத்திரிகை நிர்வாகிகள் உள்ளிட்டோர், சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில், சின்னம்மாவை நேரில் சந்தித்து வாழ்த்து : கழகப் பொதுச்செயலாளர் சின்னம்மா, முதலமைச்சராக பொறுப்பேற்று, தமிழகத்திற்கு நல்ல பல திட்டங்களை செயல்படுத்திட வேண்டும் என தொண்டர்கள், பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தல்

Jan 11 2017 1:52PM
எழுத்தின் அளவு: அ + அ -
வெளிநாட்டுத் தலைவர்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலக பிரமுகர்கள், பத்திரிகை நிர்வாகிகள் உள்ளிட்டோர் சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில், கழகப் பொதுச் செயலாளர் சின்னம்மாவை, நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சின்னம்மாவை, சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில், இந்திய மற்றும் தெற்காசிய உட்கட்டமைப்புகளுக்கான மலேசிய நாட்டின் சிறப்புத் தூதர் டத்தோ ஸ்ரீ சாமிவேலு சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

கழகப் பொதுச் செயலாளர் சின்னம்மாவை, நடிகர் சரத்குமார் மற்றும் நடிகை ராதிகா சரத்குமார் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் திரு. பெ.ஜான்பாண்டியன், சின்னம்மாவை சந்தித்து, மாண்புமிகு முதலமைச்சர் அம்மாவின் மறைவுக்கு ஆறுதல் கூறியதுடன், கழகப் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றதற்காக வாழ்த்து தெரிவித்தார்.

நடிகர் தியாகராஜன் மற்றும் நடிகர் பிரசாந்த் ஆகியோர், கழகப் பொதுச் செயலாளர் சின்னம்மாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

கழகப் பொதுச் செயலாளர் சின்னம்மாவை, இந்தியன் யூனியன் காயிதே மில்லத் லீக் தலைவர் திரு. தாவூத் மியாகான் சந்தித்து, மாண்புமிகு முதலமைச்சர் அம்மாவின் மறைவுக்கு ஆறுதல் கூறியதுடன், கழகப் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றதற்கு வாழ்த்து தெரிவித்தார்.

தஞ்சை மாலை முரசு திரு. கதிரேசன் ஆதித்தன், கழகப் பொதுச் செயலாளர் சின்னம்மாவை சந்தித்து, மாண்புமிகு முதலமைச்சர் அம்மாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்ததோடு, சின்னம்மா கழகப் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுள்ளதற்கு வாழ்த்து தெரிவித்தார்.

மூன் டிவி நிர்வாக இயக்குநர் திரு. எல். ஷா நவாஜ்கான், கழகப் பொதுச் செயலாளர் சின்னம்மாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

ஜன்னல் இதழ் பதிப்பாளர் திரு. வி. ஜனார்த்தனன், கழகப் பொதுச் செயலாளர் சின்னம்மாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

வெளிச்சம் தொலைக்காட்சி இயக்குநர் திரு. மு.பாபு, கழகப் பொதுச் செயலாளர் சின்னம்மாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

கழகப் பொதுச் செயலாளர் சின்னம்மாவை, திருச்சி மாநகர் மாவட்ட புரட்சித்தலைவி பேரவைச் செயலாளர் திரு. ஜெ. சீனிவாசன் சந்தித்து, டாக்டர் நமது எம்.ஜி.ஆர். நாளிதழ் சந்தா தொகையாக 4 லட்சத்து 53 ஆயிரம் ரூபாயை வழங்கினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • ULAGAM MARUPAKKAM

  Sun : 12:30

 • AALAYAMUM AARADHANAYUM

  Sun : 07:30

 • KALLADATHU ULAGALAVU

  Sat : 17:30

 • AZHAIPPOM ARIVOM

  Mon - Fri : 16:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

 • ADUKALAM - Jayaplus

  Sun : 10:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2996.00 Rs. 3204.00
மும்பை Rs. 3017.00 Rs. 3195.00
டெல்லி Rs. 3030.00 Rs. 3209.00
கொல்கத்தா Rs. 3031.00 Rs. 3207.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.80 Rs. 43800.00
மும்பை Rs. 43.80 Rs. 43800.00
டெல்லி Rs. 43.80 Rs. 43800.00
கொல்கத்தா Rs. 43.80 Rs. 43800.00