தமிழர் நலனை பாதுகாத்த மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மா வழியில் செயல்படும் தமிழக அரசு, ஜல்லிக்கட்டை நடத்துவதை உறுதி செய்யும் - முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் திட்டவட்டம் - ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என்ற எண்ணம், தி.மு.க.வுக்கு கிஞ்சித்தும் இல்லை என்றும் குற்றச்சாட்டு

Jan 11 2017 1:56PM
எழுத்தின் அளவு: அ + அ -
காவிரி நதிநீர் பிரச்சனை, முல்லைப் பெரியாறு பிரச்சனை, சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சனைகளில் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா, தமிழர் நலன்களைப் பாதுகாத்தது போன்று, அம்மா வழியில் செயல்படும் தமிழக அரசு, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறுவதை நிச்சயம் உறுதி செய்யும் என்றும், இதில் எள்ளளவும் பின்வாங்கப் போவதில்லை என்று முதலமைச்சர் திரு.ஒ.பன்னீர்செல்வம் உறுதிபடத் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்துவதில் தி.மு.க.வுக்கு எப்போதுமே அக்கறை இல்லை என்றும் முதலமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.

முதலமைச்சர் திரு.ஓ.பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜல்லிக்கட்டு நடைபெற வலியுறுத்தி பல அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபட்டும் பல அரசியல் கட்சித் தலைவர்களும் பல்வேறு கருத்துகளை தெரிவித்துவரும் நிலையில், இதுகுறித்து விளக்கம் தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தடைவிதிக்கக்கோரி, கடந்த 2006-ம் ஆண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது முதற்கொண்டு, கடந்த 2014-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் ஒட்டுமொத்த தடைவிதித்தது வரை நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்து விரிவாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகத்தின் பிராணிகள் நலப் பிரிவு, ஜல்லிக்கட்டு நிகழ்வு, பழக்கப்பட்ட விலங்கின் செயலைக் காட்சிப்படுத்துவது எனக் குறிப்பிட்டு, எனவே அவை தடை செய்யப்பட வேண்டும் என பரிந்துரைத்து பிராணிகளுக்கு இழைக்கப்படும் தீங்கினை தடுத்தல் சட்டத்தின் பிரிவு 22-ன் கீழ் புலிகள், கரடிகள் ஆகியவைகளுடன் காளையையும் சேர்க்க வேண்டும் என பரிந்துரைத்தது. இதன் அடிப்படையில், தி.மு.க அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி அரசு தனது கடந்த 2011-ம் ஆண்டு ஜூலை மாதம் 11-ம் தேதி நாளிட்ட அறிவிக்கையில் காளையையும் இந்தப் பட்டியலில் சேர்த்து அறிவிக்கை ஒன்றை வெளியிட்டது எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் 7-ம் தேதி மாண்புமிகு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா, அப்போதை பிரதமருக்கு அளித்த கோரிக்கை மனுவில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்த வழிவகுக்கும் வகையில் உரிய சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொண்டிருந்தார். கடந்த 2011-ம் ஆண்டு ஜூலை மாதம் 11-ம் தேதி நாளிட்ட மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட அறிவிக்கையில் காட்சிபடுத்தப்படும் விலங்காக சேர்க்கப்பட்டுள்ள காளைகளை அந்தப் பட்டியலில் இருந்து நீக்கிட வேண்டும் என்றும் 1960-ஆம் ஆண்டைய மிருக வதை தடுப்புச் சட்டத்தில் ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் விதமாக திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா கேட்டுக்கொண்டார்.

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை தமிழகத்தில் அனுமதிக்கும் வகையிலான எந்தவித மசோதாவும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படாததால், புரட்சித் தலைவி அம்மா கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 22-ம் தேதி அப்போதைய பிரதமருக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அந்தக் கடிதத்தில், ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்த வகை செய்யும் அவசரச் சட்டம் ஒன்றை உடனடியாகக் கொண்டுவர வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதன்பிறகும் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா, மத்திய அரசை பலமுறை தொடர்ந்து வலியுறுத்திவந்தார் என முதலமைச்சர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 19-ம் தேதி பிரதமரை தான் சந்தித்தபோது, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஏதுவாக சட்டதிருத்தங்கள் கொண்டு வரப்படவேண்டும் என வலியுறுத்தியதை குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், கடந்த 9-ம் தேதியன்று, பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வகை செய்யும் விதமாக அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டதையும் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். ஜல்லிக்கட்டு தொடர்பாக உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்துள்ள தனது தீர்ப்பினை விரைவில் வழங்கும் என்றும் இதன்மூலம் தமிழகத்திற்கு நியாயம் கிடைக்கும் என உறுதியாக நம்புவதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஜல்லிக்கட்டு நடைபெறாமல் போனதற்கு காரணமே 2011-ஆம் ஆண்டு மத்திய அரசால் வெளியிடப்பட்ட அறிவிக்கை தான் - அதற்கு உறுதுணையாய் இருந்த தி.மு.க. எவ்வளவு போராட்டங்கள் நடத்தினாலும், இந்த உண்மையை மறைக்க முடியாது - தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என்ற எண்ணம், அக்கறை, தி.மு.க.விற்கு கிஞ்சித்தும் இல்லை - தமிழகத்தின் உரிமைகளை காத்து அவற்றை மீட்டெடுத்தவர் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா - காவிரி நதிநீர் பிரச்சனை என்றாலும், முல்லைப் பெரியாறு பிரச்சனை என்றாலும், சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு என்றாலும், தமிழர் நலன் ஒன்றையே கருத்தில் கொண்டு அதைப் பாதுகாத்தவர் புரட்சித் தலைவி அம்மா - அம்மா வழியில் செல்லும் தமிழக அரசு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறுவதை நிச்சயம் உறுதி செய்யும் - இதில் எள்ளளவும் பின்வாங்கப் போவதில்லை - தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம் ஆகியவை கட்டிக்காக்கப்படும் என்பதை தமிழக மக்களுக்கு உறுதிபட தெரிவித்துக் கொள்வதாக முதலமைச்சர் திரு. ஓ.பன்னீர்செவ்லம் உறுதி படத் தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • ULAGAM MARUPAKKAM

  Sun : 12:30

 • AALAYAMUM AARADHANAYUM

  Sun : 07:30

 • KALLADATHU ULAGALAVU

  Sat : 17:30

 • AZHAIPPOM ARIVOM

  Mon - Fri : 16:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

 • ADUKALAM - Jayaplus

  Sun : 10:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2934.00 Rs. 3138.00
மும்பை Rs. 2955.00 Rs. 3129.00
டெல்லி Rs. 2968.00 Rs. 3143.00
கொல்கத்தா Rs. 2968.00 Rs. 3140.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.40 Rs. 43400.00
மும்பை Rs. 43.40 Rs. 43400.00
டெல்லி Rs. 43.40 Rs. 43400.00
கொல்கத்தா Rs. 43.40 Rs. 43400.00