தமிழ்நாட்டில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த தமிழக அரசுடன் இணைந்து செயல்பட மலேசியாவுக்கான இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகளின் உட்கட்டமைப்பின் சிறப்பு தூதர் டத்தோ ஸ்ரீ சாமிவேலு விருப்பம் : தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

Jan 11 2017 7:20PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழ்நாட்டில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த தமிழக அரசுடன் இணைந்து செயல்பட மலேசியாவுக்கான இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகளின் உட்கட்டமைப்பின் சிறப்பு தூதர் டத்தோ ஸ்ரீ சாமிவேலு விருப்பம் தெரிவித்ததாக, தமிழக முதலமைச்சர் திரு. ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

மலேசியாவுக்கான இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகளின் உட்கட்டமைப்பின் சிறப்பு தூதர் டத்தோ ஸ்ரீ சாமிவேலு தலைமைச் செயலகத்தில் இன்று, முதலமைச்சர் திரு. ஓ.பன்னீர்செல்வத்தை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அப்போது, மாண்புமிகு முதலமைச்சர் அம்மாவின் மறைவுக்கு ஆறுதல் தெரிவித்ததற்கு தமிழக அரசு சார்பில், முதலமைச்சர் நன்றி தெரிவித்துக் கொண்டார். மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மாவின் சீரிய தலைமையில் கடந்த 2015-ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மலேசியாவைச் சேர்ந்த பல்வேறு முதலீட்டாளர்கள் தமிழ்நாட்டில் முதலீடுகள் செய்ய ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதை முதலமைச்சர் அப்போது நினைவுகூர்ந்தார். முதலீட்டுத்துறையில் மலேசியாவில் இருந்து தமிழ்நாட்டில் மேற்கொள்ள வேண்டிய முதலீடுகளை அதிகரிக்க தொடர்ந்து உதவி அளிக்க முதலமைச்சர் திரு. ஓ. பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டார்.

தமிழ்நாடு தொலை நோக்கு திட்டம் 2023-ன் கீழ் மாண்புமிகு முதலமைச்சர் அம்மா தமிழ்நாட்டில் கட்டமைப்பு வசதிகளை தொடர்ந்து மேம்படுத்த உறுதி பூண்டிருந்ததையும், அந்த நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் மலேசிய அரசுடன் இணைந்து செயல்பட ஆர்வத்துடன் இருப்பதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த தமிழக அரசுடன் இணைந்து செயல்பட மலேசியாவுக்கான இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகளின் உட்கட்டமைப்பின் சிறப்பு தூதர் டத்தோ ஸ்ரீ சாமிவேலு விருப்பம் தெரிவித்ததாக முதலமைச்சர் திரு. ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பின்போது, மலேசிய சிறப்பு தூதரின் முதன்மைச் செயலாளர் திரு. E. சிவபாலன், மலேசிய நாட்டிற்கான இந்திய தூதர் திரு. அஹமது பசாரசம் பின் அப்துல் ஜலில், தலைமைச் செயலாளர் முனைவர் கிரிஜா வைத்தியநாதன், அரசு ஆலோசகர் திருமதி ஷீலா பாலகிருஷ்ணன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • POONKATRU

    Mon - Fri : 18:30

  • Jai Veer Hanuman

    Mon - Fri : 19:00

  • Kairasi Kudumbam

    Mon - Fri : 20:30

  • Sondhangal

    Mon - Fri : 21:00

  • Periya Idathu Penn

    Mon - Fri : 21:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2765.00 Rs. 2957.00
மும்பை Rs. 2785.00 Rs. 2949.00
டெல்லி Rs. 2797.00 Rs. 2962.00
கொல்கத்தா Rs. 2797.00 Rs. 2959.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 41.20 Rs. 41200.00
மும்பை Rs. 41.20 Rs. 41200.00
டெல்லி Rs. 41.20 Rs. 41200.00
கொல்கத்தா Rs. 41.20 Rs. 41200.00