தமிழ்நாட்டில், பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்களின்போது, பாரம்பரிய ஜல்லிக்கட்டு விளையாட்டு நடைபெறும் வகையில், ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்குவதற்கு, உரிய அவசரச் சட்டத்தினைப் பிறப்பிக்க, உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் : அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சின்னம்மா, பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம்

Jan 11 2017 10:11PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழ்நாட்டில், பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்களின்போது, பாரம்பரிய ஜல்லிக்கட்டு விளையாட்டு நடைபெறும் வகையில், ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்குவதற்கு, உரிய சட்டத்திருத்தம் மேற்கொள்வதற்கான அவசரச் சட்டத்தினைப் பிறப்பிக்க, உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி, அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சின்னம்மா, பிரதமர் திரு. நரேந்திரமோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சின்னம்மா, பிரதமர் திரு. நரேந்திரமோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாட்டில் இவ்வார இறுதியில் பொங்கல் பண்டிகை கொண்டாடவிருக்கும் நேரத்தில், ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்வதற்காக, மிகுந்த முக்கியத்துவமும், அவசரமும் கொண்ட இப்பிரச்னையை பிரதமரின் பரிசீலனைக்குக் கொண்டுவருவதாகத் தெரிவித்துள்ளார்.

விவசாயம் சார்ந்த கலாச்சாரத்துடன் பிரிக்க முடியாத வகையில் ஜல்லிக்கட்டு அமைந்துள்ளது - பாரம்பரிய பழக்கவழக்கங்களை பாதுகாப்பதற்கும் ஜல்லிக்கட்டு உதவுகிறது - பொங்கல் பண்டிகையில் முக்கிய இடம் பெற்றுள்ள ஜல்லிக்கட்டு, தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டாகும் - இதற்கென பிரத்யேகமாக காளைகள் வளர்க்கப்படுகின்றன - குதிரைகள், ஒட்டகங்கள் போன்ற விலங்குகளைப் போல் இல்லாமல் இந்த விளையாட்டில் காளைகளுக்கு கொடுமை இழைக்கப்படுவதில்லை - தமிழ்நாட்டில் தெய்வமாக காளைகளுக்கு வழிபாடு நடத்தப்படுகிறது - காளைகளை அடக்கும் வீரர்கள், அவற்றுக்கு துன்பம் ஏற்படுத்துவதில்லை - ஜல்லிக்கட்டின் மீதான தடை, பொதுமக்களிடையே குறிப்பாக இளைஞர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது - ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்குவதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ள வேண்டும் என கழகப் பொதுச்செயலாளர் சின்னம்மா, பிரமதரைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழ்நாட்டின் முக்கிய விளையாட்டான ஜல்லிக்கட்டு மீண்டும் நடத்தப்பட வேண்டும் என்பதில், தனது ஆசான் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா, மிகவும் ஆர்வமாக இருந்தார் என்பதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும் - காட்சிப்படுத்தும் விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகளை நீக்குவதற்கான அறிவிப்பினை, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் மிகத் தெளிவாக வெளியிட வேண்டும் - தமிழ்நாட்டில் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கு, உரிய நடவடிக்கைகளை பிரதமர் மேற்கொள்ள வேண்டும் என்றும், ஜல்லிக்கட்டு மீதான தடை குறித்து பரவலாக அதிருப்தி நிலவுவதால், இது தனது மனப்பூர்வமான வேண்டுகோள் என்றும் கழகப் பொதுச்செயலாளர் சின்னம்மா கேட்டுக் கொண்டுள்ளார்.

காளைகளை இளைஞர்கள் அடக்கும்போது வீரம் வெளிப்படுகிறது - ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்துவது தெய்வத்தன்மை கொண்ட பாரம்பரிய உரிமை என, தமிழக இளைஞர்கள் கருதுவதால், இவ்விளையாட்டு மீண்டும் நடத்தப்பட வேண்டும் என அவர்கள் விரும்புகிறார்கள் - மேலே குறிப்பிட்டுள்ள கருத்துகளின் அடிப்படையில், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் காட்சிப்படுத்தப்படும் விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகளை நீக்க வகைசெய்யும் சட்டத்தில் திருத்தம் செய்ய, அவசரச் சட்டம் ஒன்றை பிறப்பிப்பதற்கு பிரதமர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்வதாக சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

ஜல்லிக்கட்டின் மீதான தடை நீக்கப்படுவதன் மூலம், தமிழ்நாட்டின் பாரம்பரிய பண்பாட்டுச் சிறப்புகள் பாதுகாக்கப்படும் - மேலும், வரும் பொங்கல் பண்டிகைக் கொண்டாட்டங்களின்போது, ஜல்லிக்கட்டு விளையாட்டு நடைபெறுவது உறுதிப்படுத்தப்படும் - ஜல்லிக்கட்டு மீதான தடை நீக்கப்படுவதால், தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் மட்டுமின்றி, உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைவார்கள் - அத்துடன், தமிழ்நாட்டில் வழக்கமான உற்சாகத்துடன் பொங்கல் பண்டிகைக் கொண்டாட்டங்கள் நடைபெறும் என்றும், பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கழகப் பொதுச்செயலாளர் சின்னம்மா தெரிவித்துள்ளார்.மாணவர்கள் நெஞ்சார்ந்த நன்றி

ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதில் தமிழக அரசு உறுதியாக இருப்பதால், ஜல்லிக்கட்டு நடத்த உடனடியாக அவசரச் சட்டம் தேவை என பிரதமர் திரு. நரேந்திரமோடிக்கு, கழகப் பொதுச் செயலாளர் சின்னம்மா மற்றும் தமிழக அரசு கடிதம் எழுதியதற்காக பல்வேறு தரப்பினரும், பொதுமக்களும் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்றும், ஜல்லிக்கட்டுக்கு விதித்துள்ள தடையை நீக்க வேண்டும் எனவும், ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அவசர சட்டம் கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தி திருச்சியில் பள்ளி-கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பேரணியாகச் சென்றனர். ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் தேவை என பிரதமருக்கு, கழகப் பொதுச் செயலாளர் சின்னம்மா கடிதம் எழுதியதற்கு பேரணியில் பங்கேற்ற மாணவர்கள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • ULAGAM MARUPAKKAM

  Sun : 12:30

 • AALAYAMUM AARADHANAYUM

  Sun : 07:30

 • KALLADATHU ULAGALAVU

  Sat : 17:30

 • AZHAIPPOM ARIVOM

  Mon - Fri : 16:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

 • ADUKALAM - Jayaplus

  Sun : 10:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2965.00 Rs. 3171.00
மும்பை Rs. 2987.00 Rs. 3163.00
டெல்லி Rs. 3000.00 Rs. 3177.00
கொல்கத்தா Rs. 3000.00 Rs. 3174.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.20 Rs. 43200.00
மும்பை Rs. 43.20 Rs. 43200.00
டெல்லி Rs. 43.20 Rs. 43200.00
கொல்கத்தா Rs. 43.20 Rs. 43200.00