டாக்டர். எம்.ஜி.ஆரின் 100-வது பிறந்த நாள் விழாவையொட்டி, அ.இ.அ.தி.மு.க சார்பில், தமிழகம், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் 3 நாட்கள் பொதுக்கூட்டங்கள் - கழகப் பொதுச் செயலாளர் சின்னம்மா அறிவிப்பு

Jan 11 2017 10:02PM
எழுத்தின் அளவு: அ + அ -
அ.இ.அ.தி.மு.க. நிறுவனத் தலைவர், இதய தெய்வம் புரட்சித் தலைவர் 'பாரத் ரத்னா' டாக்டர் எம்.ஜி.ஆரின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு, வரும் 17ம் தேதி முதல் 19ம் தேதி வரை, தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட கழக அமைப்புகள் செயல்படும் மற்ற மாநிலங்களிலும் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என கழக பொதுச்செயலாளர் சின்னம்மா அறிவித்துள்ளார்.

அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சின்னம்மா வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர், இதய தெய்வம் புரட்சித் தலைவர் 'பாரத் ரத்னா' டாக்டர் எம்.ஜி.ஆரின் 100-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, 17.1.2017 செவ்வாய்க்கிழமை முதல் 19.1.2017 வியாழக்கிழமை வரை மூன்று நாட்கள் `புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆரின் 100-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்கள்' கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் ஒன்றியங்கள், நகரங்கள் மற்றும் மாநகராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும்; கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

பொதுக்கூட்டங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ள இடங்கள், அவற்றில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுவோர் விபரங்கள் அடங்கிய பட்டியல் கழக நாளேடான `டாக்டர் நமது எம்.ஜி.ஆர்.' நாளிதழில் வெளியிடப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

கழக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆங்காங்கே நடைபெற உள்ள பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுவார்கள்- மாவட்டக் கழகச் செயலாளர்களும், மாவட்டக் கழக நிர்வாகிகளும், தங்கள் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளை கழகம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மன்றம், புரட்சித் தலைவி பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவு உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளுடனும் இணைந்து சிறப்புப் பேச்சாளர்கள் மற்றும் கலைக் குழுவினருடன் தொடர்புகொண்டு பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்தி, அதன் விபரங்களை தலைமைக் கழகத்திற்கும், கழக நாளேடான `டாக்டர் நமது எம்.ஜி.ஆர்.' நாளிதழுக்கும் அனுப்பி வைக்க வேண்டும் என சின்னம்மா தெரிவித்துள்ளார்.

தலைமைக் கழகத்தால் அறிவிக்கப்படாத மற்ற இடங்களிலும், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும், 17.1.2017 அன்று ஆங்காங்கே புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களுடைய திருவுருவச் சிலைக்கு அல்லது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துமாறு கேட்டுக் கொள்வதாக சின்னம்மா தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • POONKATRU

  Mon - Fri : 18:30

 • Jai Veer Hanuman

  Mon - Fri : 19:00

 • Kairasi Kudumbam

  Mon - Fri : 20:30

 • Sondhangal

  Mon - Fri : 21:00

 • Periya Idathu Penn

  Mon - Fri : 21:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2777.00 Rs. 2970.00
மும்பை Rs. 2797.00 Rs. 2962.00
டெல்லி Rs. 2810.00 Rs. 2976.00
கொல்கத்தா Rs. 2810.00 Rs. 2973.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.00 Rs. 40212.00
மும்பை Rs. 43.00 Rs. 40212.00
டெல்லி Rs. 43.00 Rs. 40212.00
கொல்கத்தா Rs. 43.00 Rs. 40212.00