நிதி, உள்துறை, பொது நிர்வாகத்துடன், பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறையையும் கவனிக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி - கே. ஏ. செங்கோட்டையனுக்கு பள்ளிக் கல்வித்துறை ஒதுக்கீடு

Feb 17 2017 9:58AM
எழுத்தின் அளவு: அ + அ -
முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி கே. பழனிசாமி, பொது, இந்திய ஆட்சிப்பணி, உள்துறை, மற்றும் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை ஆகியவற்றை கவனிப்பார். மற்ற அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், முதலமைச்சராக பதவியேற்ற எடப்பாடி கே பழனிசாமி, பொதுத்துறை, இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல்பணி, இந்திய வனப்பணி, பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தம், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை ஆகியவற்றை கவனிப்பார்.

அமைச்சர் திரு. திண்டுக்கல் C. சீனிவாசனுக்கு, வனத்துறையும், அமைச்சரவையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள திரு. கே.ஏ. செங்கோட்டையனுக்கு, பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறையும் வழங்கப்பட்டுள்ளது.

அமைச்சர் திரு. செல்லூர். கே. ராஜுவுக்கு, கூட்டுறவுத்துறை, புள்ளியியல், முன்னாள் ராணுவத்தினர் நலத்துறையை கவனிப்பார்.

இதேபோல், அமைச்சர் திரு. P. தங்கமணிக்கு, மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையும், அமைச்சர் திரு. S.P. வேலுமணிக்கு, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறையும் வழங்கப்பட்டுள்ளது.

அமைச்சர் திரு. D.ஜெயக்குமாருக்கு மீன்வளத்துறை - அமைச்சர் திரு. சி.வி. சண்முகத்திற்கு சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைத்துறை ஒதுக்கப்பட்டுள்ளன.

அமைச்சர் திரு. K.P. அன்பழகன் உயர்கல்வித்துறையை கவனிப்பார்.

அமைச்சர் டாக்டர் V. சரோஜா - சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறையும், அமைச்சர் திரு. M.C. சம்பத்துக்கு தொழில்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளன.

அமைச்சர் திரு. K.C. கருப்பணனுக்கு சுற்றுச்சூழல்துறையும், அமைச்சர் திரு. R. காமராஜுக்கு உணவு, பொது விநியோகத் துறையும், அமைச்சர் திரு. O.S. மணியனுக்கு கைத்தறி மற்றும் துணிநூல்துறையும், அமைச்சர் திரு. உடுமலை கே. ராதாகிருஷ்ணனுக்கு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளன.

அமைச்சர் டாக்டர் C. விஜயபாஸ்கர் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையை கவனிப்பார். அமைச்சர் திரு. ஆர். துரைக்கண்ணு, வேளாண்மைத்துறையையும், அமைச்சர் திரு. கடம்பூர் ராஜு, செய்தி மற்றும் விளம்பரத்துறையையும், அமைச்சர் திரு. R.B. உதயகுமார் வருவாய்த்துறையையும் கவனிப்பார்கள்.

அமைச்சர் திரு. வெல்லமண்டி N. நடராஜனுக்கு சுற்றுலாத்துறையும், அமைச்சர் திரு. K.C. வீரமணிக்கு வணிகவரித்துறையும், அமைச்சர் திரு. K.T. ராஜேந்திர பாலாஜிக்கு பால்வளத்துறையும் வழங்கப்பட்டுள்ளன.

அமைச்சர் திரு. P. பெஞ்சமினுக்கு, கிராமப்புறத் தொழில்துறையும், டாக்டர் நிலோஃபர் கபிலுக்கு தொழிலாளர் நலத்துறையும், அமைச்சர் திரு. M.R. விஜயபாஸ்கருக்கு போக்குவரத்துத்துறையும் வழங்கப்பட்டுள்ளன.

அமைச்சர் டாக்டர் M. மணிகண்டன் தகவல் தொழில்நுட்பவியல் துறையையும், அமைச்சர் திருமதி. V.M. ராஜலட்சுமி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையையும், அமைச்சர் திரு. G. பாஸ்கரன் - காதி மற்றும் கிராமப்புற தொழில் துறையையும் கவனிப்பார்கள்.

அமைச்சர் திரு. சேவூர் S. ராமச்சந்திரன் இந்து சமய அறநிலையத்துறையையும், அமைச்சர் திருமதி. எஸ். வளர்மதி பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையையும்; அமைச்சர் திரு. P. பாலகிருஷ்ணா ரெட்டி கால்நடைத்துறையையும் கவனிப்பார்கள்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • ULAGAM MARUPAKKAM

  Sun : 12:30

 • AALAYAMUM AARADHANAYUM

  Sun : 07:30

 • KALLADATHU ULAGALAVU

  Sat : 17:30

 • AZHAIPPOM ARIVOM

  Mon - Fri : 16:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

 • ADUKALAM - Jayaplus

  Sun : 10:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2996.00 Rs. 3204.00
மும்பை Rs. 3017.00 Rs. 3195.00
டெல்லி Rs. 3030.00 Rs. 3209.00
கொல்கத்தா Rs. 3031.00 Rs. 3207.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.80 Rs. 43800.00
மும்பை Rs. 43.80 Rs. 43800.00
டெல்லி Rs. 43.80 Rs. 43800.00
கொல்கத்தா Rs. 43.80 Rs. 43800.00