அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சின்னம்மா ஆசியுடன் எடப்பாடி கே. பழனிசாமி முதலமைச்சராக பதவியேற்பு - 30 அமைச்சர்களும் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பதவியேற்றனர் - ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்

Feb 17 2017 10:19AM
எழுத்தின் அளவு: அ + அ -
அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சின்னம்மா ஆசியுடன் கழக சட்டமன்றக் கட்சித் தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்ட திரு. எடப்பாடி கே. பழனிச்சாமி, முதலமைச்சராக பதவியேற்றார். அவருடன் திரு. கே.ஏ. செங்கோட்டையன் உள்ளிட்ட 30 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

கூவத்தூரில் கழகப் பொதுச்செயலாளர் சின்னம்மா தலைமையில் நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் திரு. எடப்பாடி கே. பழனிசாமி, அ.இ.அ.தி.மு.க. சட்டமன்ற கட்சித் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து, ஆட்சியமைக்க, திரு. எடப்பாடி கே. பழனிச்சாமிக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார். ஆளுநரின் அழைப்பைத் தொடர்ந்து திரு. எடப்பாடி கே. பழனிச்சாமி தலைமையிலான புதிய அமைச்சரவை பட்டியல் தயாரிக்கப்பட்டது. இதனையடுத்து, கூவத்தூரில் தங்கியிருந்த அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் அங்கிருந்து புறப்பட்டு போயஸ் தோட்ட இல்லத்திற்கு வந்தனர். அங்கு, மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மாவின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

இதனைத்தொடர்ந்து, ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சராக திரு. எடப்பாடி கே. பழனிச்சாமி பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

முதலமைச்சருடன் திரு. கே.ஏ. செங்கோட்டையன் உட்பட 30 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் திருமதி கிரிஜா வைத்தியநாதன், நாடாளுமன்ற துணை சபாநாயகர் டாக்டர் மு. தம்பிதுரை, தமிழக சட்டப்பேரவை தலைவர் திரு. தனபால், சட்டமன்ற உறுப்பினர்கள், எம்.பி.க்கள், அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து முதலமைச்சராக பதவியேற்றுள்ள திரு. எடப்பாடி கே. பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள், ஆளுநர் திரு. வித்யாசாகர் ராவுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

ஆளுநர் மாளிகையில் குழுமியிருந்த ஏராளமான தொண்டர்கள், மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மா வழியிலான கழக அரசு பொறுப்பேற்றதை வரவேற்கும் வகையில் வாழ்த்து முழக்கங்களை எழுப்பினர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • AZHAIPPOM ARIVOM

  Mon - Fri : 15:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

 • ADUKALAM - Jayaplus

  Sun : 10:00

 • REEL PETTI - Jaya Plus

  Sun,Sat : 16:30

 • POONKATRU

  Mon - Fri : 18:30

 • Jai Veer Hanuman

  Mon - Fri : 19:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2934.00 Rs. 3138.00
மும்பை Rs. 2955.00 Rs. 3129.00
டெல்லி Rs. 2968.00 Rs. 3143.00
கொல்கத்தா Rs. 2969.00 Rs. 3141.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 41.60 Rs. 41600.00
மும்பை Rs. 41.60 Rs. 41600.00
டெல்லி Rs. 41.60 Rs. 41600.00
கொல்கத்தா Rs. 41.60 Rs. 41600.00