முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் அ.இ.அ.தி.மு.க. அரசு பதவியேற்றதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் கழகத் தொண்டர்கள் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாட்டம்

Feb 17 2017 3:48PM
எழுத்தின் அளவு: அ + அ -
அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சின்னம்மாவின் வழிகாட்டுதலின்படி தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில், அ.இ.அ.தி.மு.க. அரசு பதவியேற்றதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் கழகத் தொண்டர்கள் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அ.இ.அ.தி.மு.க. நிறுவனர், அமரர் எம்.ஜி.ஆர். சிலைக்கு பால் அபிஷேகம் செய்த தொண்டர்கள், கழக நிர்வாகிகள், கழகப் பொதுச் செயலாளர் சின்னம்மாவின் சபதம் நிறைவேறியுள்ளதாகவும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

சேலம் புறநகர் மாவட்டம் சங்ககிரி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தாரமங்கலம் பகுதியில், எம்.ஜி.ஆர். சிலை அருகே இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் கழகத் தொண்டர்கள் உற்சாகமாகக் கொண்டாடினர்.

முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிச்சாமி தலைமையில் கழக அரசு பதவியேற்றதை அடுத்து, தூத்துக்குடியில், மாவட்ட அ.இ.அ.தி.மு.க சார்பில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கழகத்தினர் உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

இதேபோல், கோவில்பட்டியிலும் அ.இ.அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

மதுரை பெரியார் பேருந்து நிலையம் முன்பாக அ.இ.அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாகக் கொண்டாடினர். திருமங்கலம், வாடிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

மதுரை மாநகர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க சார்பில், மாநகர் மாவட்ட கழக அலுவலகம் முன்பு கழகத்தினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். வாகனங்களில் சென்ற பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. திருப்பரங்குன்றம், அவனியாபுரம், அலங்காநல்லூர, திருமங்கலம், வாடிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டன.

கிருஷ்ணகிரி மாவட்டக்கழகம், நகரக்கழகம், ஒன்றியக்கழகம் சார்பில் கிருஷ்ணகிரி மாவட்ட கழக அலுவலகம் முன்பு கழக நிர்வாகிகள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். ஓசூர், பர்கூர், மத்தூர், காவேரிப்பட்டினம் உள்ளிட்ட இடங்களிலும் அ.இ.அ.தி.மு.க.வினர் உற்சாகமாகக் கொண்டாடினர்.

திருப்பூர் மாநகர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில் மாநகராட்சி அருகில் ஏராளமான கழகத் தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோன்று, திருப்பூர் புறநகர் மாவட்ட கழகத்தின் சார்பில், உடுமலை மத்திய பேருந்து நிலையம், காங்கேயம் பேருந்து நிலையம் மற்றும் தாராபுரம் அண்ணாசிலை பகுதி ஆகிய இடங்களில் ஏராளமான தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

அரியலூர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க சார்பில், அரியலூர் பேருந்து நிலையம் முன்பு அ.இ.அ.தி.மு.க.வினர் இன்றும் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர். இதேபோல், கீழப்பளூர், ஸ்ரீபுரந்தான், உடையார்பாளையம், மீஞ்சுருட்டி உள்ளிட்ட இடங்களிலும் கழகத் தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் திருவொற்றியூர் தேரடி வீதியில் அ.இ.அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் ஒன்றியக்கழகம் சார்பில், கருங்கல் பேருந்து நிலையத்தில் அ.இ.அ.தி.மு.க.வினர் பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கி உற்சாகமாகக் கொண்டாடினர்.

திருச்சி மாநகர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க சார்பில், சத்திரம் பேருந்து நிலையம், கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் அலுவலக பகுதியில் கழகத் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • ADUKALAM - Jayaplus

    Sun : 19:00

  • REEL PETTI - Jaya Plus

    Sat : 18:00

  • POONKATRU

    Mon - Fri : 18:30

  • Jai Veer Hanuman

    Mon - Fri : 19:00

  • Kairasi Kudumbam

    Mon - Fri : 20:30

  • Sondhangal

    Mon - Fri : 21:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2829.00 Rs. 2970.00
மும்பை Rs. 2822.00 Rs. 3010.00
டெல்லி Rs. 2823.00 Rs. 3011.00
கொல்கத்தா Rs. 2827.00 Rs. 3015.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.10 Rs. 43100.00
மும்பை Rs. 43.10 Rs. 43100.00
டெல்லி Rs. 43.10 Rs. 43100.00
கொல்கத்தா Rs. 43.10 Rs. 43100.00