சபாநாயகரை முற்றுகையிட்டு தாக்க முயன்ற தி.மு.க.வினர் : இருக்கையை உடைத்ததோடு, காகிதங்களையும் கிழித்தெறிந்து அராஜகம் - அவையை நடத்தவிடாமல் சபாநாயகரை முற்றுகையிட்டு, மைக்கின் மின் இணைப்பையும் துண்டித்து ரகளை

Feb 18 2017 1:23PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழக ஆளுநர் திரு. வித்யாசாகர் ராவ் உத்தரவுப்படி, முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை மீது நம்பிக்கைகோரும் தீர்மானம் இன்று பேரவையில் கொண்டுவரப்படும் நிலையில், தி.மு.க.வினரும், பன்னீர்செல்வம் அணியினரும் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகரை முற்றுகையிட்டு தாக்க முயன்ற தி.மு.க.வினர், அவரது இருக்கையை உடைத்ததோடு, அவர் மீது காகிதங்களை கிழித்தெறிந்தனர். சபாநாயகரை பேசவிடாமல், மைக்கின் மின் இணைப்பையும் துண்டித்தனர். நிலைமை விபரீதமாகவே, சபைக் காவலர்கள் சபாநாயகரை பாதுகாப்பாக அவரது அறைக்கு அழைத்துச் சென்றனர்.

முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை 15 நாட்களுக்குள் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் திரு. வித்யாசாகர் ராவ் கேட்டுக்கொண்டதன் பேரில், பேரவையில் இன்று திரு. எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை மீது நம்பிக்கைகோரும் தீர்மானம் கொண்டுவரப்படுகிறது. இதற்காக இன்று காலை 11 மணியளவில் சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டது.

பேரவைக் கூட்டம் தி.மு.க.வினரின் கூச்சல் குழப்பத்திற்கு இடையே தொடங்கியது. அவர்கள் தெரிவித்த புகாரைக் கேட்டுக்கொண்ட சபாநாயகர் திரு. ப. தனபால், உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டியது தனது பொறுப்பு என்றும், புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தார். அனைத்து சூழலையும் கருத்தில் கொண்டே இன்று வாக்கெடுப்பு நடைபெறவுள்ளதாகவும், சட்டப்பேரவை விதியின்படியே தாம் செயல்படுவதாகவும், அனைவரும் சுதந்திரமாக வாக்களிக்கலாம் என்றும் சபாநாயகர் திரு. ப. தனபால் தெரிவித்தார்.

இந்நிலையில், பன்னீர்செல்வம் அணியினர், காங்கிரஸ் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட பல்வேறு உறுப்பினர்களும் தங்களுடைய கருத்துகளை தெரிவித்தனர். இந்த சூழ்நிலையில், வாக்கெடுப்பு குறித்து சர்ச்சையை எழுப்பிய தி.மு.க. உறுப்பினர்கள், சபாநாயகரின் இருக்கையை முற்றுகையிட்டு, கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர். தி.மு.க.வுடன் கைகோர்த்து பன்னீர்செல்வம் அணியினரும் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகரின் இருக்கை உடைக்கப்பட்டதோடு, அவரின் மைக்கின் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. மேஜையை தள்ளி, தி.மு.க.வினர் குழப்பத்தை ஏற்படுத்தியதோடு, சட்டமன்ற செயலாளரின் மேஜையில் இருந்த தாள்களை கிழித்து, சபாநாயகரை நோக்கி எறிந்து பெரும் ரகளையில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து தி.மு.க.வினரும், பன்னீர்செல்வம் அணியினரும் அமளியில் ஈடுபட்டதோடு, சபாநாயகரை தாக்கவும் முயன்றனர். உடனடியாக சபைக் காவலர்கள் வரவழைக்கப்பட்டு, சபாநாயகர் பாதுகாப்பாக அவருடைய அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • POONKATRU

  Mon - Fri : 18:30

 • Jai Veer Hanuman

  Mon - Fri : 19:00

 • Kairasi Kudumbam

  Mon - Fri : 20:30

 • Sondhangal

  Mon - Fri : 21:00

 • Periya Idathu Penn

  Mon - Fri : 21:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2777.00 Rs. 2970.00
மும்பை Rs. 2797.00 Rs. 2962.00
டெல்லி Rs. 2810.00 Rs. 2976.00
கொல்கத்தா Rs. 2810.00 Rs. 2973.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.00 Rs. 40212.00
மும்பை Rs. 43.00 Rs. 40212.00
டெல்லி Rs. 43.00 Rs. 40212.00
கொல்கத்தா Rs. 43.00 Rs. 40212.00