மதுரை மாவட்டம் சின்னக்கட்டளை கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி : 400-க்கும் மேற்பட்ட மாடுபிடிவீரர்கள் பங்கேற்பு - வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுப்பொருட்கள்

Feb 17 2017 9:10PM
எழுத்தின் அளவு: அ + அ -
மதுரை மாவட்டம் சின்னக்கட்டளை கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 400-க்கும் மேற்பட்ட மாடுபிடிவீரர்கள் பங்கேற்றனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டன.

தமிழர்களின் பாரம்பரிய அடையாளமான ஜல்லிக்கட்டை நடத்துவதற்காக, அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளர் சின்னம்மா, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதன் பயனாக, ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் இயற்றப்பட்டு, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான தடைகள் முற்றிலும் நீங்கின.

இதனைத்தொடர்ந்து, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள சின்னக்கட்டளை கிராமத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு, ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்றது. பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 340 காளைகள் களம் இறக்கப்பட்டன. 400க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் போட்டியில் கலந்து கொண்டு, சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கினர். போட்டியின் முடிவில் வெற்றி பெற்ற வீரர்களுக்கும், காளைகளின் உரிமையாளர்களுக்கும் பீரோ, கட்டில், பைக் போன்ற பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. இந்த ஜல்லிக்கட்டுப்போட்டியை ஏராளமானோர் ஆர்வமுடன் கண்டு களித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • ADUKALAM - Jayaplus

    Sun : 19:00

  • REEL PETTI - Jaya Plus

    Sat : 18:00

  • POONKATRU

    Mon - Fri : 18:30

  • Jai Veer Hanuman

    Mon - Fri : 19:00

  • Kairasi Kudumbam

    Mon - Fri : 20:30

  • Sondhangal

    Mon - Fri : 21:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2772.00 Rs. 2965.00
மும்பை Rs. 2792.00 Rs. 2957.00
டெல்லி Rs. 2804.00 Rs. 2970.00
கொல்கத்தா Rs. 2804.00 Rs. 2967.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 41.90 Rs. 41900.00
மும்பை Rs. 41.90 Rs. 41900.00
டெல்லி Rs. 41.90 Rs. 41900.00
கொல்கத்தா Rs. 41.90 Rs. 41900.00