கழகப் பொதுச் செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மா வழிகாட்டுதலின்படி செயல்படும் கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவுறுத்தலின்படி தமிழகம் முழுவதும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்

Jul 11 2018 11:55AM
எழுத்தின் அளவு: அ + அ -
கழக பொதுச்செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மா வழிகாட்டுதலின்படி செயல்படும் துணைப் பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு. டிடிவி தினகரன் ஆலோசனைப்படி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கழக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டங்கள் மற்றும் உறுப்பினர் சேர்க்‍கை முகாம்கள் நடைபெற்று வருகின்றன.

அம்மா மக்கள் முன்னேற்ற கழக தென் சென்னை வடக்கு மாவட்டம் அண்ணா நகர் பகுதி கழகத்தின் சார்பில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் கழக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் கூட்டத்தில் தலைமை நிலையச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான திரு பி. பழனியப்பன் தென்சென்னை வடக்கு மாவட்ட கழக செயலாளர் திரு.வி.பி.கலைராஜன் கழக அமைப்பு செயலாளரும் அண்ணாநகர் பகுதிப் பொறுப்பாளருமான திரு. வாசுதேவன் அமைப்பு செயலாளர் திரு. வ சுகுமார்பாபு மாணவர் அணி இணைச்செயலாளர் திரு. பரணீஸ்வரன், கழக மாணவர் அணி துணைச் செயலாளர் திரு. வி.இ. சிவா, அண்ணாநகர் பகுதி கழகச் செயலாளர் திரு. கே .என். குணசேகரன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

திண்டுக்‍கல் மாவட்டம் பழனி ஒன்றியத்திற்குட்பட்ட அக்‍ரஹாரம் பாப்பாம்பட்டியில் அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகம் சார்பில் உறுப்பினர் சேர்க்‍கை முகாம் நடைபெற்றது. திண்டுக்‍கல் மேற்கு மாவட்டக்‍ கழகச் செயலாளர் திரு. நல்லுசாமி, கழக அமைப்புச் செயலாளர் திரு. குமாரசாமி, கழக அம்மா பேரவை துணைச் செயலாளரும், பழனி தொகுதிக்‍கான உறுப்பினர் சேர்ப்பு பொறுப்பாளருமான திரு. எம்.ஜி. முத்தையா மற்றும் ஒன்றியக்‍ கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் ஆர்வத்துடன் வந்து தங்களை கழகத்தில் இணைத்துக்‍ கொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • MANNERGAL

    Sat : 21:00

  • ULAGAM MARUPAKKAM

    Sun : 12:30

  • AALAYAMUM AARADHANAYUM

    Sun : 07:30

  • KALLADATHU ULAGALAVU

    Sat : 17:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2926.00 Rs. 3129.00
மும்பை Rs. 2946.00 Rs. 3120.00
டெல்லி Rs. 2959.00 Rs. 3134.00
கொல்கத்தா Rs. 2959.00 Rs. 3131.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.00 Rs. 40000.00
மும்பை Rs. 40.00 Rs. 40000.00
டெல்லி Rs. 40.00 Rs. 40000.00
கொல்கத்தா Rs. 40.00 Rs. 40000.00