வீரன் அழகுமுத்துக்‍கோனின் திருவுருவச் சிலைக்‍கு, கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை - கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் பெருந்திரளாக பங்கேற்பு

Jul 11 2018 5:46PM
எழுத்தின் அளவு: அ + அ -
வீரன் அழகுமுத்துக்‍கோனின் 308-வது பிறந்தநாள் விழாவையொட்டி, தூத்துக்‍குடி மாவட்டம் கட்டாளங்குளத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்‍கு, கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

சுதந்திரப் போராட்ட வீரர் வீரன் அழகுமுத்துக்‍கோனின் 308-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, தூத்துக்‍குடி மாவட்டம் கட்டாளங்குளத்தில் மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மா அவர்களால் அமைக்‍கப்பட்ட வீரன் அழகுமுத்துக்‍கோனின் மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்‍கு, கழகப் பொதுச் செயலாளர் தியாகத் தலைவி சின்னம்மா வழிகாட்டுதல்படி செயல்படும், கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் கலந்துகொண்டு அவரது திருவுருவச் சிலைக்‍கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில், தூத்துக்‍குடி​வடக்‍கு மாவட்ட கழகச் செயலாளர் திரு. சுந்தர்ராஜ், தூத்துக்‍குடி தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் திரு.ஹென்றி தாமஸ், கழக அமைப்புச் செயலாளர் திரு.மாணிக்‍கராஜா, மகளிரணி இணைச் செயலாளர் திருமதி உமாமகேஸ்வரி, சசிகலா புஷ்பா எம்.பி. உள்ளிட்ட நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும், பொதுமக்‍களும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன், இரட்டை இலை சின்னம் வழக்‍கில் சாதகமான தீர்ப்பு வரும் என தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • AREMPESAVIRUMBU

    Mon - Fri : 18:00

  • MANNERGAL

    Sat : 21:00

  • ULAGAM MARUPAKKAM

    Sun : 12:30

  • AALAYAMUM AARADHANAYUM

    Sun : 07:30

  • KALLADATHU ULAGALAVU

    Sat : 17:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2854.00 Rs. 3052.00
மும்பை Rs. 2875.00 Rs. 3044.00
டெல்லி Rs. 2887.00 Rs. 3058.00
கொல்கத்தா Rs. 2887.00 Rs. 3055.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 42.20 Rs. 42200.00
மும்பை Rs. 42.20 Rs. 42200.00
டெல்லி Rs. 42.20 Rs. 42200.00
கொல்கத்தா Rs. 42.20 Rs. 42200.00