பெருந்தலைவர் காமராஜரின் 116-வது பிறந்தநாள் : திண்டுக்கல்லில் காமராஜர் திருவுருவச் சிலைக்கு வரும் 15ம் தேதி அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்

Jul 11 2018 2:55PM
எழுத்தின் அளவு: அ + அ -
பெருந்தலைவர் காமராஜரின் 116-வது பிறந்தநாளை முன்னிட்டு திண்டுக்‍கல் பழைய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்‍கு, வரும் 15ம் தேதி அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழக தலைமைக்‍கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழக அரசியலிலும், இந்திய அரசியலிலும் மாபெரும் சகாப்தமாக திகழ்ந்த, தமிழக முன்னாள் முதலமைச்சர், கல்வி கண் திறந்த கர்ம வீரர் பெருந்தலைவர் காமராஜரின் 116-வது பிறந்தநாளை முன்னிட்டு, திண்டுக்‍கல் பழைய பேருந்து நிலையம் அருகில் அமையப்பெற்றுள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்‍கு, அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் எம்.எல்.ஏ., வரும் 15ம் தேதி ஞாயிற்றுக்‍கிழமை, காலை 10 மணியளவில் மாலை அணிவித்து மரியாதை செலுத்த இருப்பதாகத் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

இந்நிகழ்விற்கு தலைமைக்‍கழக நிர்வாகிகள், மாவட்டக்‍கழகச் செயலாளர்கள், சார்பு அணிகளின் செயலாளர்கள், நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள், பொதுமக்‍கள் என அனைவரும் பெருந்திரளாக கலந்துகொள்ள வேண்டுமென்றும் கேட்டுக்‍கொள்ளப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • MANNERGAL

    Sat : 21:00

  • ULAGAM MARUPAKKAM

    Sun : 12:30

  • AALAYAMUM AARADHANAYUM

    Sun : 07:30

  • KALLADATHU ULAGALAVU

    Sat : 17:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2926.00 Rs. 3129.00
மும்பை Rs. 2946.00 Rs. 3120.00
டெல்லி Rs. 2959.00 Rs. 3134.00
கொல்கத்தா Rs. 2959.00 Rs. 3131.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.00 Rs. 40000.00
மும்பை Rs. 40.00 Rs. 40000.00
டெல்லி Rs. 40.00 Rs. 40000.00
கொல்கத்தா Rs. 40.00 Rs. 40000.00