தூத்துக்‍குடி துப்பாக்‍கிச்சூடு வழக்‍கில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளை நீதிபதிகள் சரமாரி கேள்வி - 99 நாட்கள் தொடர்ந்த போராட்டம் தொடர்பான வீடியோ ஆதாரங்களை 18ம் தேதிக்‍குள் தாக்‍கல் செய்ய உத்தரவு

Jul 11 2018 5:33PM
எழுத்தின் அளவு: அ + அ -
தூத்துக்‍குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்‍கு எதிரான போராட்டம் தொடர்பான வீடியோ ஆதாரங்களை வரும் 18-ம் தேதிக்‍குள் தாக்‍கல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்‍ கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்‍குடியில் சுற்றுச்சூழலுக்‍கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் போலீசார் கண்மூடித்தனமாக துப்பாக்‍கிச்சூடு நடத்தியதில், 13 பேர் கொல்லப்பட்டனர். 100-க்‍கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்நிலையில், இச்சம்பவம் குறித்த வழக்‍கு விசாரணை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்‍ கிளையில் நீதிபதிகள் திரு.செல்வம், திரு. பஷீர் அகமது ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்‍கு வந்தது. அப்போது, துப்பாக்‍கிச்சூட்டில் எந்த வகை துப்பாக்‍கிகள் பயன்படுத்தப்பட்டன? - துப்பாக்‍கிச்சூடு சம்பவத்தின்போது அப்போதைய மாவட்ட ஆட்சியர் எங்கு சென்றிருந்தார்? என நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பினர். மேலும், ஸ்டெர்லைட் ஆலைக்‍கு எதிராக 99 நாட்கள் தொடர்ந்த போராட்டம் குறித்த வீடியோ ஆதாரங்களை வரும் 18-ம் தேதிக்‍குள் தாக்‍கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • MANNERGAL

    Sat : 21:00

  • ULAGAM MARUPAKKAM

    Sun : 12:30

  • AALAYAMUM AARADHANAYUM

    Sun : 07:30

  • KALLADATHU ULAGALAVU

    Sat : 17:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2926.00 Rs. 3129.00
மும்பை Rs. 2946.00 Rs. 3120.00
டெல்லி Rs. 2959.00 Rs. 3134.00
கொல்கத்தா Rs. 2959.00 Rs. 3131.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.00 Rs. 40000.00
மும்பை Rs. 40.00 Rs. 40000.00
டெல்லி Rs. 40.00 Rs. 40000.00
கொல்கத்தா Rs. 40.00 Rs. 40000.00