பிளாஸ்டிக்கை முழுவதுமாக தவிர்த்துவிட்டு செயல்படும் பழங்காநத்தம் காய்கறி சந்தை : எல்லோரையும் வெகுவாகக் கவர்ந்த சந்தையானது

Jul 11 2018 5:51PM
எழுத்தின் அளவு: அ + அ -
பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடுகளால் ஏற்படும் தீமைகள் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், பிளாஸ்டிக்கை முழுவதுமாக தவிர்த்துவிட்டு செயல்படும் பழங்காநத்தம் காய்கறி சந்தை, அனைவரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்துள்ளது.

ஏழை-எளியோர், தொழிலாளர்கள், அரசு அலுவலர்கள் என அனைத்து தரப்பினரும் சரிசமமாக வாழும் சமத்துவத்தை போற்றும் பகுதியாக விளங்குகிறது மதுரை பழங்காநத்தம். இங்குள்ள உழவர் சந்தையில் ரசாயன உரங்கள் ஏதுமின்றி, இயற்கையான முறையில் விளைவிக்கப்படும் காய்கறிகளே விற்பனை செய்யப்படுகின்றன. இங்கு வரும் வாடிக்கையாளர்களும் கையில் மஞ்சள் பை, கட்டை பைகளுடனேயே காய்கறிகளை வாங்க வருகின்றனர். பிளாஸ்டிக் பைகளுடன் வரும் ஒருசில வாடிக்கையாளர்களுக்கு, இங்கிருப்பர்வர்கள் அதனை தவிர்க்குமாறு அறிவுரை வழங்குகின்றனர். பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்து அச்சந்தையின் நிர்வாக அலுவலர் உலகம்மாள், பல்வேறு விழிப்புணர்வுகளை பொதுமக்களிடையே ஏற்படுத்தியுள்ளார். இவ்வாறு கடந்த 2 ஆண்டுகளாக பிளாஸ்டிக் பயன்பாடில்லா சந்தையாக உருவாகியுள்ள பழங்காநத்தம் சந்தைக்கு மத்திய அரசின் துாய்மை இந்தியா விருது கிடைத்துள்ளது கூடுதல் சிறப்பம்சமாகும்.

உலகம்மாள் போன்ற உலக நன்மை விரும்பிகளின் தீவிர முயற்சியால் பழங்காநத்தம் உழவர் சந்தை உண்மையிலேயே ஒரு இயற்கை அங்காடி என்ற சிறப்புக்குரியதாக திகழ்கிறது.

நம் நலனுக்காக இயற்கை அன்னை நம்மை தாங்கிப் பிடிக்கும்போது, பிளாஸ்டிக் பயன்பாடுமூலம் இயற்கைக்கு எதிராய் செயல்படுவதை தவிர்ப்பது ஒட்டுமொத்த மனித சமுதாயத்தின் கடமையாக உள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Wed,Sat : 19:00

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • KALLADATHU ULAGALAVU

  Sat : 17:30

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

 • ADUKALAM - Jayaplus

  Sun : 10:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3024.00 Rs. 3234.00
மும்பை Rs. 3046.00 Rs. 3226.00
டெல்லி Rs. 3059.00 Rs. 3240.00
கொல்கத்தா Rs. 3059.00 Rs. 3237.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.60 Rs. 40600.00
மும்பை Rs. 40.60 Rs. 40600.00
டெல்லி Rs. 40.60 Rs. 40600.00
கொல்கத்தா Rs. 40.60 Rs. 40600.00