தூத்துக்‍குடி ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியை தொடங்க அனுமதி மறுத்தது தேசிய பசுமை தீர்ப்பாயம் - தமிழ்நாடு மாசுக்‍கட்டுப்பாட்டு வாரியம் வரும் 20-ம் தேதிக்‍குள் அறிக்‍கை தாக்‍கல் செய்யவும் உத்தரவு

Aug 9 2018 6:05PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஸ்டெர்லைட் ஆலையில் மீண்டும் உற்பத்தியை தொடங்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி மறுத்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் செயல்பட அனுமதிக்‍கக்‍கோரி அந்நிறுவனத்தின் சார்பில் தொடரப்பட்ட வழக்‍கு, இன்று டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் விசாரணைக்‍கு வந்தது. இந்த வழக்‍கு விசாரணைக்‍கு உகந்தது அல்ல என்பதால் இதனை விசாரிக்‍க கூடாது என, தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது. ஆனால் தீர்ப்பாயம் தமிழக அரசின் கோரிக்‍கையை நிராகரித்ததால் விசாரணை நடைபெற்றது.

ஸ்டெர்லைட் ஆலை சார்பில் ஆஜரான வழக்‍கறிஞர், பராமரிப்பு மற்றும் நிர்வாக பணிகளை மேற்கொள்ள ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு அனுமதி வழங்க அனுமதி வழங்க வேண்டும் என கேட்டுக்‍கொண்டார். ஆலையில் நிர்வாக ரீதியிலான பணிகளுக்‍கு அனுமதி வழங்கியபோதிலும், அதில் உற்பத்தி தொடங்குவதற்கு அனுமதிக்‍க முடியாது என நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.

மேலும் ஸ்டெர்லைட் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள ஏற்கனவே அமைக்‍கப்பட்டுள்ள குழுவில், மத்திய மாசுக்‍கட்டுப்பாட்டு வாரிய பிரதிநிதியையும் சேர்த்துக்‍ கொள்ள நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச்சுழலை எந்த மாதிரியாக பாதிக்‍கிறது என்பது தொடர்பான அறிக்‍கையை, தமிழ்நாடு மாசுக்‍கட்டுப்பாட்டு வாரியம் வரும் 20-ம் தேதிக்‍குள் தாக்‍கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்‍கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3072.00 Rs. 3286.00
மும்பை Rs. 3096.00 Rs. 3278.00
டெல்லி Rs. 3108.00 Rs. 3292.00
கொல்கத்தா Rs. 3108.00 Rs. 3289.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 42.60 Rs. 42600.00
மும்பை Rs. 42.60 Rs. 42600.00
டெல்லி Rs. 42.60 Rs. 42600.00
கொல்கத்தா Rs. 42.60 Rs. 42600.00