வட மாநிலங்களைப் போல மதுரையிலும் துப்பாக்கி கலாச்சாரம் : பொதுமக்கள் அச்சம்

Aug 10 2018 2:59PM
எழுத்தின் அளவு: அ + அ -
வட மாநிலங்களை போல மதுரையிலும் துப்பாக்கி கலாச்சாரம் தலைதுாக்குவதாக பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கோவில் மாநகரமாக இருந்த மதுரையில் கடந்த திமுக ஆட்சியின் போது கொலை கொள்ளைகள் துப்பாக்கி கலாச்சாரம் என சட்டவிரோத செயல்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. மறைந்த முதலமைச்சர் அம்மா அவா்களின் சிறப்பான நிர்வாகத்தால் மதுரையில் சட்ட ஒழுங்கு சிறப்பாக பாதுகாக்கப்பட்டு பொதுமக்கள் அமைதியாக வாழ்ந்துவந்தனா். இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டாக எடப்பாடி அரசின் காவல்துறை அலட்சியமாக செயல் படுவதால் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போய்விட்டது.

மதுரை முழுவதிலும் எங்கு பார்த்தாலும் கொலை கொள்ளைகள் நாளுக்கு நாள் அதிகரித்துவருவதோடு துப்பாக்கி கலாச்சாரமும் தலைதுாக்கி நிற்கிறது. மதுரையில் பல்வேறு பகுதிகளில் பிரபர ரவுடி கும்பலிடமிருந்தும், திமுக பிரமுகா்களிடமிருந்தும் குஜராத்தில் இருந்து வாங்கிவரப்பட்ட கைத்துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன. இவற்றை எல்லாம் பார்க்கும் போது தமிழகத்தில்துப்பாக்கி கலாச்சாரம் தழைத்தோங்கிவிட்டதா என்ற கேள்வி எழுகிறது.

மதுரை கீரைத்துறை பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக வீட்டிற்குள் நாட்டு வெடிகுண்டு தயாரித்த போது வெடித்ததில் 3பேர் பலியாகினா். மதுரையில் திமுகவின் முன்னாள் மண்டல தலைவருக்கும் அப்பகுதியை சேர்ந்த மற்றொரு கும்பலுக்கும் தொடர்ந்து மோதல் போக்கு இருந்துவருகிறது. இதில் இதுவரையிலும் 15க்கும் மேற்பட்டோர் கொலை செய்யப்பட்டுள்ளனா். கடந்த ஆண்டில் மட்டும் முன்விரோதம் காரணமாக பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி கொலை செய்வது, சாமான்ய மக்களை கொலை செய்வது என அவா்களின் அராஜகம் உச்சக்கட்டத்திற்கே சென்றுவிட்டது.

குண்டர் சட்டத்தில் ரவுடிகள் கைதுசெய்யப்பட்டாலும் ஆளும் தரப்பின் அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி தற்போது ரவுடிகள் அனைவரும் மாநகரில் சர்வசாதரணமாக துப்பாக்கிகளுடன் வலம் வருகின்றனா். ஆளும் கட்சியின் ஆதரவோடு ரவுடிகள் தலைவிரித்தாடுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

குஜராத்தில் இருந்து துப்பாக்கிகள் யார் மூலமாக பெறப்பட்டது, இதில் யார்யாருக்கு தொடர்பு உள்ளது, மதுரையில் இது போன்று சட்டவிரோதமாக எத்தனை பேரிடம் துப்பாக்கிகள் உள்ளன என்பது குறித்து போலிசார் விசாரணை நடத்தி பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3072.00 Rs. 3286.00
மும்பை Rs. 3096.00 Rs. 3278.00
டெல்லி Rs. 3108.00 Rs. 3292.00
கொல்கத்தா Rs. 3108.00 Rs. 3289.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 42.60 Rs. 42600.00
மும்பை Rs. 42.60 Rs. 42600.00
டெல்லி Rs. 42.60 Rs. 42600.00
கொல்கத்தா Rs. 42.60 Rs. 42600.00