மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டதற்கு கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடும் கண்டனம் - நிபந்தனையின்றி உடனடியாக விடுவிக்கவும் வலியுறுத்தல்
Aug 10 2018 12:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
'மே-17' இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு. திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டிருப்பது, மனித உரிமை மீறல் என்றும், அவரை உடனடியாக, நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் என்றும் கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் வலியுறுத்துள்ளார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டத்தில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை, ஐ.நா. சபையின் மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் பதிவு செய்ததற்காக, 'மே-17' இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு. திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டுள்ளது, மனித உரிமை மீறல் மட்டுமல்லாது அடிப்படை உரிமையை மீறும் செயல் என, கழக துணைப்பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன், தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
திருமுருகன் காந்தியை விமான நிலையத்திலேயே கைது செய்ததை வன்மையாக கண்டிப்பதாகவும், அவர் உடனடியாக நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் திரு. டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.