கர்நாடக மாநிலத்தில் பரவலாக பெய்து வரும் கனமழை - கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து ஒரு லட்சத்து 43 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் காவிரி டெல்டா மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை

Aug 10 2018 3:51PM
எழுத்தின் அளவு: அ + அ -
கர்நாடகாவில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால், அங்குள்ள அணைகளில் இருந்து உபரிநீர் தமிழகத்திற்கு அதிக அளவில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்‍கு மத்திய அரசு வெள்ள அபாய எச்சரிக்‍கை விடுத்துள்ளது.

கர்நாடகா, கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக கே.ஆர்.எஸ்., கபினி அணைகள் நிரம்பி வழிவதால், தமிழகத்திற்கு வினாடிக்கு 1 லட்சத்து 43 ஆயிரம் கனஅடி உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் 2 நாட்களில் மேட்டூர் அணைக்கு வந்துசேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தின் 6 மாவட்டங்களில், மத்திய அரசு வெள்ள அபாய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.

கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, திருச்சி, தஞ்சை ஆட்சியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. எனவே, காவிரி ஆற்றங்கரையோர பகுதிகளில் உரிய வெள்ள அபாய முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, மேட்டூர் அணையின் பதினாறு கண் பாலத்தையொட்டி அமைந்துள்ள பகுதி மக்கள் தாழ்வான பகுதிகளில் இருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வருவாய்த்துறையினர் காவிரிக்‍ கரையோரங்களில் தண்டோரா போட்டு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Wed,Sat : 19:00

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • KALLADATHU ULAGALAVU

    Sat : 17:30

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

  • ADUKALAM - Jayaplus

    Sun : 10:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3040.00 Rs. 3251.00
மும்பை Rs. 3062.00 Rs. 3242.00
டெல்லி Rs. 3075.00 Rs. 3257.00
கொல்கத்தா Rs. 3075.00 Rs. 3254.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.70 Rs. 40700.00
மும்பை Rs. 40.70 Rs. 40700.00
டெல்லி Rs. 40.70 Rs. 40700.00
கொல்கத்தா Rs. 40.70 Rs. 40700.00