சேலத்தில் தரமற்ற முறையில் கட்டப்படும் ஆழ்துளை கிணறுகளின் தடுப்பு சுவர்கள் : பேரூராட்சி நிர்வாகம் பல கோடி ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு
Aug 10 2018 3:48PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே புதிதாக போடப்பட்ட ஆழ்துளை கிணறுகளின் தடுப்புச் சுவர்கள் தரமில்லாமல் கட்டப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே உள்ள செந்தாரப்பட்டி பேரூராட்சியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இப்பகுதியில் கடும் வறட்சியின் காரணமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதற்காக பேரூராட்சி பொது நிதியில் இருந்து ஆழ்துளை கிணறுகளை அமைத்தது.
ஆனால் இந்த ஆழ்துளை கிணறுகளின் பாதுகாப்பு கருதி அதைச் சுற்றி தடுப்பு சுவர் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் ஏரி மணலை கொண்டும், கருங்கற்கள் கொண்டும் கட்டப்பட்டு வருவதால் தரமற்று இருப்பதாகவும், மேலும் பேருராட்சி நிர்வாகம் கட்டிடம் கட்டுதலில் பல கோடி ரூபாய் முறைகேட்டில் ஈடுபடுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும், ஆளுங்கட்சியினருக்கு ஆதரவாக மறைமுக டெண்டர் வைத்து இதுபோன்ற முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகவும், இதனால் பொதுமக்களின் வரிப்பணத்தை வீணடிப்பதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.