சென்னை புழல் மத்திய சிறையில் கைதிகள் பலர் சிறைத்துறை அதிகாரிகள் உதவியோடு உல்லாச வாழ்க்கை : 18 எல்.சி.டி.க்கள் டிவி, 2 எப்.எம் வானொலி பெட்டிகள், 15 கைபேசிகள் பறிமுதல்

Sep 14 2018 5:01PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை அருகே உள்ள புழல் மத்திய சிறையில், கைதிகள் பலர் சிறைத்துறை அதிகாரிகளின் உதவியோடு உல்லாச வாழ்க்‍கையில் மூழ்கி திளைப்பது அம்பலமானதையடுத்து, சிறைத்துறை டி.ஐ.ஜி. அங்கு சோதனை மேற்கொண்டார்.

சென்னை அருகே புழல் பகுதியில் சுமார் 200 ஏக்‍கர் பரப்பளவில் அமைந்துள்ளது மத்திய சிறை. இங்கு பல்வேறு கொலை, கொள்ளை வழக்‍குகளில் தண்டனை விதிக்‍கப்பட்டகைதிகள் சிலர், தொலைக்‍காட்சி, மின்விசிறி, பஞ்சுமெத்தை, செல்போன் என சகல வசதிகளும் சொகுசு வாழ்க்‍கையில் ஈடுபடுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியானது. அங்குள்ள சிறைத்துறை அதிகாரிகளுக்‍கு லஞ்சம் கொடுத்து அவர்கள் இதுபோன்ற வாழ்க்‍கையை அனுபவிப்பது அம்பலமானது.

இதுகுறித்த புகாரின் பேரில், சிறைத்துறை இயக்‍குநரும், கூடுதல் டி.ஜி.பி.யுமான திரு. அசுதோஷ் சுக்‍லா நேற்று அங்கு அதிரடி சோதனை நடத்தினார். இதன் தொடர்ச்சியாக இன்று சிறைத்துறை டி.ஐ.ஜி. திரு. முருகேசன் புழல் சிறையில் சோதனை மேற்கொண்டார்.

இந்த சோதனையில் கைதிகள் அறையில் இருந்து 18 எல்.சி.டி.க்‍கள், டிவி இரண்டு எப்.எம் எனப்படும் வானொலி பெட்டிகள், 15 கைபேசிகள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன.

இந்தச் சம்பவத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மீது சந்தேகம் எழுந்திருப்பதால், அவர்களின் நடவடிக்‍கை குறித்து ரகசியமாக கண்காணிக்கப்படுவதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • MANNERGAL

    Sat : 21:00

  • ULAGAM MARUPAKKAM

    Sun : 12:30

  • AALAYAMUM AARADHANAYUM

    Sun : 07:30

  • KALLADATHU ULAGALAVU

    Sat : 17:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2926.00 Rs. 3129.00
மும்பை Rs. 2946.00 Rs. 3120.00
டெல்லி Rs. 2959.00 Rs. 3134.00
கொல்கத்தா Rs. 2959.00 Rs. 3131.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.00 Rs. 40000.00
மும்பை Rs. 40.00 Rs. 40000.00
டெல்லி Rs. 40.00 Rs. 40000.00
கொல்கத்தா Rs. 40.00 Rs. 40000.00