முக்கிய திட்டங்களுக்‍கு மக்‍களின் கருத்துகளை கேட்காமலேயே மத்திய அரசு அனுமதி வழங்கவேண்டுமென தமிழக அரசு விடுத்துள்ள கோரிக்‍கை - கழக துணைபொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் கடும் கண்டனம்

Oct 11 2018 1:37PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தில் முக்கிய திட்டங்களுக்கு மக்கள் கருத்தை கேட்காமலேயே அனுமதி வழங்கவேண்டுமென மக்கள் விரோத எடப்பாடி பழனிசாமி அரசு, மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருப்பதற்கு கழக துணைபொதுச்செயலாளர் திரு. டிடிவி. தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கழக துணைபொதுச்செயலாளர் திரு. டிடிவி. தினகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களின் கருத்தை கேட்காமலேயே எண்ணெய் மற்றும் எரிவாயு குழாய்கள் பதிக்கும் திட்டம் உட்பட பல்வேறு முக்கிய திட்டங்களுக்கும் அனுமதி வழங்கவேண்டுமென மத்திய அரசிடம் தமிழக சுற்றுச்சூழல் அமைச்சர் கே.சி. கருப்பண்ணன் கொடுத்திருக்கும் மனு, தமிழகத்தில் நடைபெறுவது மக்கள் விரோத அரசு என்பதை நிரூபிக்கும் விதமாக அமைந்துள்ளது என தெரிவித்துள்ளார்.

மக்களின் கருத்துகேட்பு கூட்டங்களால் ஏற்படும் காலதாமதம் முதலீட்டாளர்கள் நஷ்டம் அடைய காரணமாகிறது எனக்கூறுவதன் மூலம், இந்த அரசு யாருக்காக இயங்கிகொண்டிருக்கிறது என்பது தெள்ளத்தெளிவாகிறது என திரு. டிடிவி. தினகரன் குறிப்பிட்டுள்ளார். மக்களிடம் கருத்துகேட்பது என்பது முக்கிய திட்டங்களுக்கு அவசியமானது என சுற்றுச்சூழல் மதிப்பீட்டு அறிவிக்கை எடுத்துரைப்பதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், அதை மறுக்கும் இந்த அரசின் நடவடிக்கைகள் மக்கள் விரோதமானது மட்டுமின்றி சட்டவிரோதமானதும்கூட என தெரிவித்துள்ளார். மக்கள் விரும்பாத எந்தவொரு திட்டத்தையும் தமிழகத்திற்குள் கொண்டுவர அனுமதிக்க மாட்டோம் என கூறிவரும் இந்த அரசு, தற்போது ஹைட்ரோ கார்பன் திட்டத‌்தை விரிவுபடுத்தும் நோக்கில், வேதாந்தா போன்ற தனியார் குழுமங்கள் தங்குதடையின்றி தமிழகத்தில் வணிகம் செய்யவே தமிழக அரசு, மத்திய அரசிடம் கோரிக‌்கை வைத்திருப்பதாகவும், இது எடப்பாடி அரசின் இரட்டை வேடத்‌தையே காட்டுகிறது என்றும் திரு. டிடிவி. தினகரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

மக்களின் நலனையும், மக்களின் குரலையும் நசுக்க நினைக்கும் பழனிசாமி அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் மத்திய அரசு முன்வைக்கப்பட்ட இந்த மக்கள் விரோத வஞ்சக கோரிக்கையை பழனிசாமி அரசு திரும்பபெற வேண்டும் என்று தாம் வலியுறுத்துவதாகவும் திரு. டிடிவி. தினகரன் தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Wed,Sat : 19:00

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • MANNERGAL

    Sat : 21:00

  • ULAGAM MARUPAKKAM

    Sun : 12:30

  • AALAYAMUM AARADHANAYUM

    Sun : 07:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3022.00 Rs. 3232.00
மும்பை Rs. 3045.00 Rs. 3224.00
டெல்லி Rs. 3057.00 Rs. 3238.00
கொல்கத்தா Rs. 3057.00 Rs. 3235.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 41.40 Rs. 41400.00
மும்பை Rs. 41.40 Rs. 41400.00
டெல்லி Rs.41.40 Rs. 41400.00
கொல்கத்தா Rs. 41.40 Rs. 41400.00