தமிழகத்தில் தொழிலாளர்கள், மாணவர்கள், ஓய்வூதியதாரர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம்

Oct 11 2018 4:01PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தில் தொழிலாளர்கள், மாணவர்கள், ஓய்வூதியதாரர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூரை அடுத்த தாராபுரம் அரசு மருத்துவமனையில் சி.டி.ஸ்கேன் வசதி மற்றும் எலும்பு மருத்துவரை நியமிக்கக்கோரி, நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தாராபுரம் அரசு மருத்துவமனையில், புதிதாக சி.டி. ஸ்கேன் நிறுவ வேண்டும், நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதால் எலும்பு முறிவு பிரிவுக்கு தனி மருத்துவர் நியமனம் செய்ய வேண்டும் என முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர் அருகேயுள்ள பாதிரிக்குப்பம் முதல் அரிசி பெரியான்குப்பம் சாலை, நெடுஞ்சாலைத்துறை எல்லையில் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து மாற்று இடம் கேட்டு அப்பகுதி மக்‍கள், மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தனர். வீடுகளை அகற்றப் போவதாக தகவல் வந்ததையடுத்து, பொதுமக்‍கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், உயர்த்தப்பட்ட ஓய்வூதிய நிலுவை தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளஐ வலியுறுத்தி தூத்துக்குடியில் ஓய்வூதியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஆர்ப்பாடத்தில் கலந்து கொண்டவர்கள் தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

இதேபோல், நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பினர் தர்ணா போராட்டம் நடத்தினர்.

தமிழ்நாடு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், ஒன்பது அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி, பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில், தர்ணா போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் அனைத்து துறை சார்ந்த ஓய்வூதியர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

சத்துணவு மையங்களில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திண்டுக்கல்லில் சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் 500க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே திருமண்டங்குடி திரு ஆரூரான் சர்க்கரை ஆலைத் தொழிலாளர்கள் ஊதிய நிலுவைக்காக 11 வது நாளாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தொழிற்சங்க பிரிவினர் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆங்கில மொழி தேர்வு முறையை கண்டித்து, நெல்லையில் போராட்டம் நடத்திய மாணவ, மாணவிகள் மீது தடியடி நடத்திய காவல்துறையை கண்டித்து, கன்னியாகுமரியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக, உறுப்பு கல்லூரியான இலக்குமி புரம் கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடியை அடுத்த கோவில்பதாகை பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி, ஏராளமான பெண்கள் மதுப்பானக் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்த காவல்துறையினர், விரைந்து சென்று, மதுக்கடையை மூட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.

வணிக வரித்துறை பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் வணிகவரி பணியாளர்கள் கண்டண ஆர்பாட்டம் நடத்தினர். போராட்டத்தில் திரளான பணியாளர்கள் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிரான கண்டன முழக்கம் எழுப்பினர்.

ஓய்வூதிய பணப்பலன்களை வழங்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் ஓய்வூதியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 300க்கும் மேற்பட்டோர் ஓய்வூதியர்கள் கலந்துக்கொண்டு, மத்திய மற்றும் மாநில அரசுகள், தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3213.00 Rs. 3369.00
மும்பை Rs. 3308.00 Rs. 3130.00
டெல்லி Rs. 3311.00 Rs. 3133.00
கொல்கத்தா Rs. 3312.00 Rs. 3134.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 41.30 Rs. 41300.00
மும்பை Rs. 41.30 Rs. 41300.00
டெல்லி Rs. 41.30 Rs. 41300.00
கொல்கத்தா Rs. 41.30 Rs. 41300.00