திருப்பூர் மாநகராட்சி நிர்வாகத்தின் அலட்சியம் : கழிவுநீர் சாலையில் ஆறாக ஓடுவதால் பொதுமக்கள் பாதிப்பு
Oct 11 2018 5:10PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பூரில் மாநகராட்சி நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாக, கழிவுநீர் சாலையில் ஆறாக ஓடுவதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 56-வார்டு, கே.வி.ஆர்.நகர், ஜீவா நகர் பகுதிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் அடிப்படை வசதிகளான பாதாள சாக்கடை வசதி, கழிவுநீர் கால்வாய் வசதி, சாலை வசதிகள் இல்லாததால் அப்பகுதி மக்கள் மிக கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளனர். இந்த ஜீவா நகர் பகுதியில் கடந்த 10-நாட்களாக சாலையின் நடுவில் பாதாள சாக்கடை மூடியை உடைத்துகொண்டு கழிவு நீர் சாலையின் நடுவே செல்வதால் அப்பகுதி மக்கள், பள்ளி செல்லும் குழந்தைகள், முதியவர்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று பல முறை மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.