மதுரையில் பன்றிக் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த நபர் உயிரிழப்பு : பொதுமக்கள் அச்சம்

Nov 8 2018 3:56PM
எழுத்தின் அளவு: அ + அ -
மதுரையில் பன்றிக்‍ காய்ச்சலுக்‍கு சிகிச்சை பெற்று வந்த நபர் உயிரிழந்த சம்பவம், அங்குள்ள மக்‍களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்த அருண் என்பவர், கடந்த ஒரு மாதமாக கடுமையான காய்ச்சலின் காரணமாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பன்றிக்காய்ச்சல் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நாளுக்குநாள் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதோடு உயிரிழப்புகளும் அதிகரிக்கின்றன. தற்போதைய நிலவரப்படி, மாவட்டம் முழுவதிலும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 308 பேர் வைரஸ் காய்ச்சலாலும், 41 பேர் பன்றிக்‍காய்ச்சல் அறிகுறிகளுடனும், 8 பேர் டெங்கு காய்ச்சலுடன் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதுவரை பன்றிக் காய்ச்சல் மற்றும் வைரஸ் காய்ச்சலுக்காக ​அரசு ராஜாஜி மருத்துவமனையில் மட்டும் 10க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருப்பதால் பொதுமக்‍கள் அச்சமடைந்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3612.00 Rs. 3863.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48000.00
மும்பை Rs. 48.40 Rs. 48000.00
டெல்லி Rs. 48.40 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48000.00