எடப்பாடி அரசின் நிர்வாகச்சீர்கேடு : தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடரும் கொலை - கொள்ளை : பொதுமக்கள் அச்சம்

Nov 8 2018 4:07PM
எழுத்தின் அளவு: அ + அ -
எடப்பாடி அரசின் நிர்வாகச்சீர்கேடு காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடரும் கொலை, கொள்ளை சம்பவங்களால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

திருச்சி மாவட்டம் தொட்டியம், அரசலூர் கிராமத்தை சேர்ந்தவர் விமல் லாரன்ஸுக்‍கும், அதே பகுதியை சேர்ந்த விஜயராகவன் என்பவரது குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் காரணமாக தகராறு இருந்துள்ளது. விமல் லாரன்ஸ்சை விஜயராகவன் சகோதரர் வசந்தகுமார், தாய் வளர்மதி ஆகியோருடன் சேர்ந்து இரும்பு கம்பியால் தாக்கி கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த விமல் லாரன்ஸ் உயிரிழந்தார். சடலத்தை கைப்பற்றிய போலீசார் விஜயராகவனை கைது செய்து தலைமறைவாக உள்ள வசந்தகுமார், வளர்மதி ஆகியோரை தேடி வருகின்றனர்.

திருச்சி தலைமை தபால்நிலையம் அருகில் டி.இ.எல்.சி. குடியிருப்பில் வசித்து வரும் ராஜ் பெர்னான்டோ என்பவர், தனது தங்கை சந்திரியா, பேரன் ரொசாரியோ ஆகியோருடன் ரயில் நிலையம் சென்றபோது அவர்களுக்கு பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர், சந்திரியா அணிந்திருந்த 10 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோடினார். அப்‍போது நிலை தடுமாறி கீழே விழுந்த சந்திரியாவிற்கு தலை மற்றும் கழுத்து, பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள எடையூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஆறுமுகம், அதே கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு விவசாயி மேகவர்ணத்திடம், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு 300 ரூபாயை கடனாக பெற்றுள்ளார். கடனை திருப்பி கேட்டபோது, இருவருக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் ஆறுமுகத்தை மேகவர்ணன், அவரது மருமகன் ராமதாஸ் ஆகியோர் இரும்பு கம்பி மற்றும் உருட்டு கட்டையை கொண்டு தாக்கியுள்ளனர். படுகாயம் அடைந்த ஆறுமுகம், ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஆந்திரா மற்றும் மதுரையில் இருந்து சென்னைக்கு கஞ்சா கடத்தி வரப்பட்டு விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகே உள்ள பட்டரவாக்கம் பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அத்திப்பட்டில் வசித்து வரும் பீகார் பகுதியை சேர்ந்த ராக்கேஷ் என்ற வட இந்திய நபரை கைது செய்தனர். அவரிடம் இருந்து அரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மதுரை நியூ எல்லிஸ்நகர் பகுதி குடிசை மாற்று வாரியத்தில் ரமேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். பக்கத்து வீட்டினருடன் அவருக்கு அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று அப்துல்லா என்ற இளைஞர் ரமேஷை தள்ளிவிட்டு தாக்கியதில் அவர் கீழே விழுந்து மூச்சு இன்றி மயங்கினார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ரமேஷை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதித்த மருத்துவர்கள் ரமேஷ் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து கொலை வழக்கின் கீழ் இளைஞர் அப்துல்லாவை எஸ்.எஸ்.காலனி போலிசார் கைது செய்து விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இதனிடையே மதுரை மருதுபாண்டியர் நகர் பகுதியில் அழகன்குளம் பகுதியை சேர்ந்த கமல் என்ற இளைஞரை மர்ம கும்பல் ஒன்று பட்டபகலில் ஆள்நடமாட்டம் உள்ள பகுதியில் ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டினர். இதில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் ஏற்பட்ட பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் இளைஞருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தல்லாகுளம் போலீசார் சிசிடிவி காட்சிகளை கொண்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3612.00 Rs. 3863.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48000.00
மும்பை Rs. 48.40 Rs. 48000.00
டெல்லி Rs. 48.40 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48000.00