சேகர்ரெட்டிக்‍கு ஆதரவாக நில குத்தகைதாரரை மிரட்டியதாக அமைச்சர் வீரமணிக்‍கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்‍கு - 2 வாரத்தில் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவு

Nov 8 2018 6:29PM
எழுத்தின் அளவு: அ + அ -
அமைச்சர் வீரமணிக்‍கு எதிராக தொடுக்‍கப்பட்ட புகார் மீதான வழக்‍கு விசாரணையில், 2 வாரத்தில் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேலூரை சேர்ந்த ராமமூர்த்தி, ஜெயப்பிரகாஷ் உயர்நீதிமன்றத்தில் தாக்‍கல் செய்த மனுவில், கடந்த 2010-ஆம் ஆண்டு குத்தகைக்கு வாங்கிய நிலத்தை காலி செய்யுமாறு, சேகர் ரெட்டிக்காக அமைச்சர் வீரமணி சட்டவிரோதமாக தங்களை மிரட்டுவதாக குறிப்பிட்டுள்ளனர். இதன்மூலம் அமைச்சர் வீரமணிக்‍கு 100 கோடி ரூபாய் கிடைக்‍கும் என்பதால், அரசியல் பலத்தை பயன்படுத்தி, போலி ஆவணங்களில் கையெழுத்து பெற்றுள்ளதாகவும் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து டி.ஜி.பி-யிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், எனவே, அமைச்சர் வீரமணி மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு அந்த மனுவில் கோரியிருந்தனர். இந்த மனு, நீதிபதி திரு. மகாதேவன் முன்பு இன்று விசாரணைக்‍கு வந்தபோது, அரசு தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது. இதனையடுத்து, 2 வாரத்தில் பதிலளிக்க அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Wed,Sat : 19:00

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • KALLADATHU ULAGALAVU

    Sat : 17:30

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

  • ADUKALAM - Jayaplus

    Sun : 10:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2971.00 Rs. 3178.00
மும்பை Rs. 2994.00 Rs. 3170.00
டெல்லி Rs. 3006.00 Rs. 3184.00
கொல்கத்தா Rs. 3006.00 Rs. 3181.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.00 Rs. 40000.00
மும்பை Rs. 40.00 Rs. 40000.00
டெல்லி Rs. 40.00 Rs. 40000.00
கொல்கத்தா Rs. 40.00 Rs. 40000.00