"சென்னையில் ஒயிலாட்டம்" -1,400 ஒயிலாட்ட கலைஞர்கள் பங்கேற்று கின்னஸ் சாதனை நிகழ்ச்சி

Nov 26 2018 4:27PM
எழுத்தின் அளவு: அ + அ -
"சென்னையில் ஒயிலாட்டம்" என்ற தலைப்பில் ஆயிரத்து 400 ஒயிலாட்ட கலைஞர்கள் பங்கேற்ற கின்னஸ் சாதனை நிகழ்ச்சி பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடியில் உள்ள தனியார் கல்லூரியில், "சென்னையில் ஒயிலாட்டம்" என்ற தலைப்பில் ஒயிலாட்ட கலைஞர்களின் கின்னஸ் சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், 4 வயது முதல் 55 வயது வரை உள்ள ஆயிரத்து 418 ஒயிலாட்ட கலைஞர்கள், தமிழகம் மட்டுமின்றி, மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமானோர் கலந்து கொண்டு நடனமாடி கின்னஸ் சாதனை படைத்தனர்.

ஏற்கனவே 700 கலைஞர்கள் பங்கேற்று 7 நிமிடங்கள் நடனமாடியதே சாதனையாக இருந்தது. அதனை முறியடிக்கும் விதமாக ஆயிரத்து 418 ஒயிலாட்ட கலைஞர்கள் கூடி 7 நிமிடங்கள் தொடர்ந்து தமிழ் பாடல்களுக்கு நடனமாடி கின்னஸ் சாதனை படைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குனர் கங்கை அமரன், இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், விஜிபி சந்தோசம், நகைச்சுவை நடிகர் தம்பி ராமையா, கவிஞர் பிறைசூடன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நெல்லை டவுன் சத்தியமூர்த்தி தெருவில் உள்ள பெண்கள் அமைப்பினர் உலக அமைதி, உலக நன்மை மற்றும் சீரான மழை பெய்ய வேண்டி இந்திரனுக்கு ஒரு வாரம் பூஜை செய்து வழிபாடு நடத்தி வருகின்றனர். இவ்விழாவில் இந்திரனை வேண்டியும், முளைப்பாரி வைத்தும் கோலாட்டம் அடித்து வழிபாடு நடத்தினர். பின்னர் பெண்கள் கோலாட்டம் அடித்தபடியே முக்கிய வீதிகள் வழியாக முளைப்பாரியுடன் பசு மற்றும் கன்றுவை ஊர்வலமாக எடுத்துச் சென்று வயல் பகுதியில் கரைத்தனர். சிறுமிகள், பெண்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3824.00 RS. 4015.00
மும்பை Rs. 3900.00 Rs. 4000.00
டெல்லி Rs. 3910.00 Rs. 4030.00
கொல்கத்தா Rs. 3939.00 Rs. 4079.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.70 Rs. 50700.00
மும்பை Rs. 50.70 Rs. 50700.00
டெல்லி Rs. 50.70 Rs. 50700.00
கொல்கத்தா Rs. 50.70 Rs. 50700.00