பொதுத்தேர்வு மதிப்பெண் குறித்த ஓ.பி.எஸ்.சின் பேச்சால் மாணவர்கள் குழப்பம் - சமூக ஆர்வலர்கள் கண்டனம்
Dec 4 2018 6:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பொதுத்தேர்வில் கிரேடு முறை அமல்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், அதிக மதிப்பெண்பெறுபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என ஓ.பன்னீர்செல்வம் பேசியுள்ளது மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஓ.பி.எஸ்., 10,11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவிலும், தேனி மாவட்டத்தில் முதல் மதிப்பெண் எடுப்பவர்களுக்கும் மறைந்த மாண்புமிகு அம்மா பெயரில் தங்கப்பதக்கம் வழங்கப்படும் என தெரிவித்தார். மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தும் விதாக பேசியதால், அதிகாரிகளிடையே குழப்பம் நிலவியது. ஏற்கெனவே இதுபோன்ற நிகழ்வுகளால் தற்கொலைகள் அதிகரித்து வரும் நிலையில், ஓ.பி.எஸ்.-ன் பேச்சு, ஆசிரியர்கள் மட்டுமின்றி, மாணவ-மாணவிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓ.பி.எஸ்.-ன் பேச்சு மிகவும் கண்டிக்கத்தக்கது என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் குற்றம்சாட்டியுள்ளனர்.