அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் அம்மாவின் 2-ஆம் ஆண்டு நினைவுதினம் கர்நாடக மாநிலத்தில் அனுசரிப்பு - குவைத் நாட்டிலும் அம்மாவுக்கு அஞ்சலி நிகழ்ச்சி
Dec 6 2018 3:06PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், அம்மாவின் 2ம் ஆண்டு நினைவுதினம் கர்நாடக மாநிலத்தில் அனுசரிக்கப்பட்டது.
கர்நாடக மாநிலக் கழகம் சார்பில், பெங்களூர், சிமோகா, கோலார் தங்கவயல் உட்பட பல்வேறு இடங்களில் நேற்று நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. பெங்களூர் சுதந்திரநகரில், அலங்கரிக்கப்பட்ட அம்மாவின் திருவுருவப் படத்திற்கு கழக செய்தித்தொடர்பாளரும், கர்நாடக மாநில கழகச் செயலாளருமான வா. புகழேந்தி தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் கர்நாடக மாநிலக் கழகப் பொருளாளர் திரு. ராஜேந்திரன், துணைச் செயலாளர்கள் திரு. ராஜூ, திருமதி பரமேஸ்வரி பரமேஸ்வரன், மாவட்டக் கழகச் செயலாளர் திரு. குமார் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இதேபோல், குவைத் நாட்டிலும் கழகம் சார்பில் மாண்புமிகு அம்மாவின் 2ம் ஆண்டு நினைவு தின அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. மிர்காப் நகரில், மண்டல அமைப்பாளர் மதுரை எம். சக்திவேல் ராஜன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மண்டல நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு அம்மாவுக்கு அஞ்சலி செலுத்தினர்.