மருத்துவர்கள் போராட்டம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? - தமிழக சுகாதாரத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி
Dec 6 2018 5:48PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் பலகட்டங்களாக நடத்திவரும் போராட்டம் தொடர்பாக சுகாதாரத்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்கக்கோரி, தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு, ஆர்ப்பாட்டம் போன்ற பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், மருத்துவர்களின் உயிர்காக்கும் சேவை பாதிக்கப்படுவதாகக் கூறி, இதற்கு எதிராக மதுரையைச் சேர்ந்த திரு.முகமது யூனிஸ்ராஜா என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த போராட்டம் தொடர்பாக தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் குறிதது அறிக்கை தாக்கல் செய்யுமாறு சுகாதாரத்துறைக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.