பாம்பன் பாலத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிப்பு - ரயில்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு
Aug 13 2019 6:45PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சுதந்திர தினத்தை முன்னிட்டு, பாம்பன் பாலத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு, தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என மத்திய புலனாய்வு அமைப்பு எச்சரிக்கை விடுத்ததையடுத்து, தமிழகம் முழுவதும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் ரயில் பாலத்தில், ரயில்வே போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்பு கருதி, பாம்பன் பாலம் பகுதியில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ராமேஸ்வரத்திற்கு வரும் ரயில்களுக்கும் கூடுதல் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.