உதகையில் வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிடச் சென்ற தி.மு.க எம்.பி. ஆ.ராசாவை முற்றுகையிட்ட பெண்கள் - சரமாரி கேள்வி எழுப்பி விரட்டிய சம்பவத்தால் பரபரப்பு

Aug 14 2019 11:01AM
எழுத்தின் அளவு: அ + அ -
நீலகிரி மாவட்டம் உதகையில் வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிடச் சென்ற நீலகிரி தொகுதி தி.மு.க எம்.பி. ஆ.ராசாவிடம் பெண்கள் சரமாரி கேள்வி கேட்டு விரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரகாலமாக பெய்த வரலாறு காணாத மழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதுடன், வீடுகள் இடிந்ததில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்‍கள், முகாம்களில் தங்கியுள்ளனர். இந்நிலையில், நீலகிரி தொகுதி தி.மு.க எம்பி ஆ.ராசா, உதகை காந்தலில் உள்ள வெள்ள நிவாரண முகாமில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கச் சென்றார். அப்போது, அங்கிருந்தவர்கள், வெள்ள பாதிப்பு ஏற்பட்டு ஒரு வாரத்திற்கு மேலாகியும் எங்கே சென்றீர்கள்? என முற்றுகையிட்டு சரமாரி கேள்விகளை எழுப்பினர். இதையடுத்து, அப்பகுதியிலிருந்து ராசா மற்றும் அவருடன் வந்த தி.மு.க.வினரை விரட்டினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3594.00 Rs. 3844.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.20 Rs. 48000.00
மும்பை Rs. 48.20 Rs. 48000.00
டெல்லி Rs. 48.20 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.20 Rs. 48000.00