தூத்துக்குடி: கிராம நிர்வாகி துணையுடன் சரல்மண் திருட்டு - மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் புகார்
Aug 14 2019 12:46PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய நிலத்தில், அனுமதி இல்லாமல் அதிகாரிகள் துணையுடன் சரல்மண் எடுப்பதைக் கண்டித்து, விவசாயிகள், மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் குமாரபுரத்தில் சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு, விவசாயம் செய்ய அரசு நிலம் வழங்கியது. இந்த நிலத்தில் விவசாயிகள் தற்போது விவசாயம் செய்து வரும் நிலையில், கிராம நிர்வாகி துணையுடன் சிலர், இங்கு சரல்மண் எடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.