கன்னியாகுமரி: வர்த்தகர்களை முடக்க நினைக்கும் மத்திய-மாநில அரசுகளைக் கண்டித்து தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை சார்பில் விழிப்புணர்வு பயணம்
Aug 14 2019 11:45AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சில்லரை வணிகத்தை பாதுகாக்க வலியுறுத்தியும், வர்த்தகர்களை முடக்க நினைக்கும் மத்திய-மாநில அரசுகளைக் கண்டித்தும், தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை சார்பில், கன்னியாகுமரியில், சுதேசி எழுச்சி விழிப்புணர்வு பயணம் நடைபெற்றது.
ஆன்லைன் வர்த்தகத்தால், நடுத்தர வியாபாரிகள் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு, கடன் தொல்லையில் சிக்கித் தவிக்கும் நிலை ஏற்படுகிறது. ஆக்கிரமிப்பு என்ற பெயரில், கடைகள் மற்றும் வியாபார நிறுவனங்கள் அகற்றப்படும் நிலையால் வியாபாரிகள் காலம் காலமாக நடத்தி வரும் தொழில், அடியோடு அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இப்பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணவும், வியாபாரிகள், காலம் காலமாக நடத்தி வந்த தொழில் அடியோடு அழிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதை தடுக்க வேண்டியும், தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை சார்பில், கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பிருந்து, குமரி-கேரளா எல்லை பகுதியான களியக்காவிளைக்கு, இருசக்கர சுதேசி எழுச்சி பயணம் நடைபெற்றது. இதில் பல்வேறு வியாபாரிகள், சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.