நீலகிரியில் மீண்டும் மழை - மீட்புப் பணிகள் பாதிப்பு - சேலம், பெரம்பலூர், கடலூர், நாகையிலும் மழை

Aug 14 2019 11:50AM
எழுத்தின் அளவு: அ + அ -
நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருவதால் மீட்புப் பணிகள் பாதிக்‍கப்பட்டுள்ளன.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரகாலமாக வரலாறு காணாத கனமழை பெய்தது. நூற்றுக்‍கணக்கான இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு, பல சாலைகள் துண்டிக்‍கப்பட்டன. ஆயிரகணக்கான விவசாய நிலங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லபட்டன. நூற்றுக்‍கணக்கான வீடுகள் இடிந்ததில் 6 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் கூடலூர், பந்தலூர் பகுதிகளில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியிருப்பதால், மீட்புப் பணிகள் பாதிக்கபட்டுள்ளன.

இதனிடையே, சேலத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. பழைய மற்றும் புதிய பேருந்து நிலையம், கொண்டலாம்பட்டி, சீலநாயக்‍கன்பட்டி, அயோத்தியாபட்டினம் உள்ளிட்ட இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்தது.

பெரம்பலூர் மாவட்டம் கவுல்பாளையம், கோனேரிப்பாளையம், சிறுவாச்சூர், விளாமுத்தூர் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. இம்மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கடும் வறட்சி நிலவிய நிலையில், திடீரென பெய்த மழையால், விவசாயிகள், பொதுமக்‍கள் மகிழ்ச்சியடைந்தனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. மேலும், அண்ணாமலை நகர், கீரப்பாளையம், வண்டிகேட் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக பலத்த மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்காற்று வீசியது.

நாகை மாவட்டம் சீர்காழி உள்ளிட்ட இடங்களில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், நேற்று மாலை திடீரென மழை பெய்தது. கொள்ளிடம், வைத்தீஸ்வரன்கோவில், பூம்புகார் உள்ளிட்ட பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதன் காரணமாக மின்சாரம் துண்டிக்‍கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00