நெல்லை அருகே முகமூடி கொள்ளையர்களை துணிச்சலாக விரட்டி அடித்த வயதான தம்பதியருக்கு தமிழக அரசு விருது - சுதந்திர தினத்தையொட்டி கௌரவிப்பு

Aug 14 2019 4:35PM
எழுத்தின் அளவு: அ + அ -
நெல்லை அருகே முகமூடி கொள்ளையர்களை விரட்டி அடித்த மூத்த தம்பதியர்க்‍கு அரசு சார்பில் விருது வழங்கி கெளரவிக்கப்பட உள்ளது.

நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள கல்யாணி புரத்தைச் சேர்ந்தவர் சண்முகவேல். இவரது மனைவி செந்தாமரை. அண்மையில் சண்முகவேல் வீட்டிற்கு முகமூடி கொள்ளையர்கள் வந்தனர். சண்முகவேல் மற்றும் அவரது மனைவி செந்தாமரை ஆகியோர் கொள்ளையர்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களை விரட்டியடித்தனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி, அனைவரும் மூத்த தம்பதியினரின் வீரத்தை பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பாவின் பரிந்துரையின் பேரில் சண்முகவேல் மற்றும் அவரது மனைவி செந்தாமரைக்கு, தமிழக அரசு சார்பில் வீர தீர செயல்களுக்கான விருது வழங்கப்படவுள்ளது. விமானம் மூலம் இன்று சென்னை வரும் அவர்கள், தமிழக முதலமைச்சரை, மாலை சந்திக்கின்றனர். நாளை நடைபெறும் சுதந்திர தின விழாவில், இருவருக்கும் விருது வழங்கப்படுகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3594.00 Rs. 3844.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.20 Rs. 48000.00
மும்பை Rs. 48.20 Rs. 48000.00
டெல்லி Rs. 48.20 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.20 Rs. 48000.00