தியாகத் தலைவி சின்னம்மாவின் பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் ஆலயங்களில் வழிபாடு-அன்னதானம் : ஏழை எளியோருக்‍கு நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாட்டம்

Aug 19 2019 11:42AM
எழுத்தின் அளவு: அ + அ -
தியாகத்தலைவி சின்னம்மாவின் பிறந்தநாளையொட்டி இன்று தமிழகமெங்கும் சர்வமத பிரார்த்தனையும், அன்னதானமும் நடைபெற்றன. ஏழை எளியோருக்‍கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மாவின் அருகில் இருந்து, 33 வருடங்களாக தொய்வின்றி கழகப் பணியாற்றிய தியாகத்தலைவி சின்னம்மாவின் பிறந்தநாள் இன்று தமிழகமெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.

மயிலாப்பூர் பகுதிக்‍கழகம் சார்பில், மயிலாப்பூர் பகுதிக்‍ கழகச் செயலாளர் திரு.அர்ஜூனன் தலைமையில், சென்னை மயிலாப்பூர் சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தென்சென்னை தெற்கு மாவட்டம் சார்பில், திருவான்மியூரில் உள்ள காக்கும் கரங்கள் முதியோர் இல்லத்தில் உணவு வழங்கப்பட்டது. வேளச்சேரி பகுதி அம்மா பேரவை துணைத்தலைவர் திரு.நெல்லை கே.செந்தில், மாவட்ட வர்த்தக அணி துணைத் தலைவர் திரு.வடசேரி கதிர், வேளச்சேரி பகுதிக்‍ கழகச் செயலாளர் திரு.எம். சந்திரபோஸ், வேளச்சேரி பகுதிக்‍ கழக துணைச் செயலாளர் திரு.அந்தோணி சம்பத் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தியாகத்தலைவி சின்னம்மா பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை நங்கநல்லூர் முத்துமாரியம்மன் ஆலயத்தில் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் திரு. ம.கரிகாலன் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் விஜயலட்சுமி, ஆலந்தூர் பகுதிக்‍ கழகச் செயலாளர் திரு.ஏ.என். லட்சுமிபதி, மீனவர் அணி துணைச் செயலாளர் திரு.ஆர்.சி. குப்பன், கிழக்கு மாவட்ட கழக துணைச் செயலாளர் திரு.வேம்பரசன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

விழுப்புரத்தில் உள்ள ரயிலடி விநாயகர் கோயிலில், வடக்கு மாவட்டக்‍ கழகம் சார்பில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விநாயகருக்கு பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. விழுப்புரம் வடக்கு மாவட்ட கழக செயலாளர் திரு.பாலசுந்தரம் உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டக்‍ கழகம் சார்பில், ஓசூரில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மேலும், ஓசூரில் உள்ள விநாயகா ஆதரவற்றோர் இல்லத்தில் குழந்தைகளுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நகரக்‍ கழக துணைச் செயலாளர்கள் திரு. மலேஷ், திரு.வடிவேலன், நகர இணை செயலாளர் திரு.ரவிச்சந்திரன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் சுமதி, எம்ஜிஆர் மன்ற மாவட்ட துணை செயலாளர் திரு.ராஜேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தஞ்சை தெற்கு மாவட்டக்‍ கழகம் சார்பில், தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில், அண்ணா சிலை அருகே 500-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்‍கு மரக்கன்றுகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன. தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் திரு.மா. சேகர், ஒரத்தநாடு வடக்கு-தெற்கு ஒன்றியச் செயலாளர்கள் திரு.சிவ ராஜேஷ் கண்ணன், திரு.ஆசைத்தம்பி உள்ளிட்ட கழக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

நீலகிரி மாவட்டம் உதகை அருகே மசினகுடி மசினியம்மன் கோயிலில், தியாகத்தலைவி சின்னம்மாவின் பிறந்தநாளையொட்டி மாவட்டக்‍ கழகம் சார்பில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. மாவட்ட கழக செயலாளர் திரு.எஸ். கலைச்செல்வன், கழக அமைப்புச் செயலாளர் திரு.தேனாடு லட்சுமணன், கழக சிறுபான்மை பிரிவு செயலாளர் திரு.தம்பி இஸ்மாயில், கூடலூர் ஒன்றியச் செயலாளர் திரு.தம்பி ராமசாமி மற்றும் கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தியாகத்தலைவி சின்னம்மாவின் பிறந்தநாளையொட்டி இன்று தமிழகமெங்கும் சர்வமத பிரார்த்தனையும், அன்னதானமும் நடைபெற்றன. ஏழை எளியோருக்‍கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மாவின் அருகில் இருந்து, 33 வருடங்களாக தொய்வின்றி கழகப் பணியாற்றி வரும் தியாகத்தலைவி சின்னம்மாவின் பிறந்தநாள், தமிழகமெங்கும் கொண்டாடப்பட்டது.

தென்சென்னை தெற்கு மாவட்டம் வேளச்சேரி பகுதி அம்மா பேரவை சார்பில், திருவான்மியூரில் உள்ள முதியோர் உணவு வழங்கப்பட்டது. முன்னதாக, மாண்புமிகு அம்மாவின் திருவுருவ படத்திற்கு, கழகத்தினர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

மயிலாப்பூர் பகுதிக்‍கழகம் சார்பில், பகுதி‍ கழகச் செயலாளர் திரு.அர்ஜூனன் தலைமையில், மயிலாப்பூர் சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

சென்னை நங்கநல்லூர் முத்துமாரியம்மன் ஆலயத்தில் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் திரு. ம.கரிகாலன் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

ஈரோடு மாநகர் மாவட்டம் கழக சிறுபான்மை பிரிவு சார்பில், சின்னம்மா பிறந்தநாளையொட்டி, காய்கறி சந்தையில் பொதுமக்‍களுக்‍கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில், சிறுபான்மை பிரிவு செயலாளர் திரு. அக்ஹிம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சூரியப் பாளையம் பகுதி கழகம் சார்பில், மாரியம்மன் கோவிலில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, அன்னதானம் வழங்கப்பட்டது. எம்ஜிஆர் இளைஞர் அணி சார்பில், திண்டல் முதியோர் இல்லத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், பகுதிக் கழகச் செயலாளர் திரு. அறிவழகன், அம்மா பேரவை செயலாளர் சக்தி எம்ஜிஆர் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

திருவண்ணாமலை தெற்கு மாவட்டக்‍ கழகம் சார்பில், வந்தவாசி அடுத்த தெள்ளார் கிராமத்தில், அகிலாண்டேஷ்வரி திருக்கோயிலில், தெற்கு மாவட்டக்‍ கழகச் செயலாளர் திரு. எஸ்.ஆர். தருமலிங்கம் தலைமையில், சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தஞ்சாவூரில், ஸ்ரீமத் சஞ்சீவி ஆஞ்சநேயர் ஆலயத்தில், அண்ணா தொழிற்சங்கம் பேரவை சார்பில், ஆஞ்சநேயருக்கு வடமாலை அணிவித்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தமிழ்நாடு பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்க துணைத்தலைவர் திரு. வேலு கார்த்திகேயன், உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இதில் கலந்து கொண்டனர்.

நெல்லை மாநகர் மாவட்ட சிறுபான்மை பிரிவு சார்பில், பாளையங்கோட்டையில், மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. கழக அம்மா பேரவை இணைச் செயலாளர் திரு. பரமசிவம் ஐயப்பன், மாவட்டக் கழக பொருளாளர் பால் கண்ணன், மாவட்ட பொறியாளர் அணி செயலாளர் திரு. ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00