மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியை நெருங்குகிறது - அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு

Aug 19 2019 1:43PM
எழுத்தின் அளவு: அ + அ -
மேட்டூர் அணைக்கான தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் விரைவில் முழு கொள்ளளவான 120 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால், கர்நாடகாவில் உள்ள கபினி, கே.ஆர்.எஸ் அணைகள் நிரம்பி வழிந்தன. இதனால், உபரிநீர் தமிழகத்துக்கு திறந்துவிடப்பட்டது. மேலும் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஒகேனக்கலுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தது. 2 நாட்களுக்கு முன்பு ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 27 ஆயிரம் கனஅடியாக இருந்தது. இது படிப்படியாக உயர்ந்து நேற்று 30 ஆயிரம் கனஅடியாக உயர்ந்தது. ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி வினாடிக்கு 29 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை 8 மணி நிலவரப்படி 35 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 10 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து வருகிறது. நேற்று 113 அடியை எட்டிய நிலையில், இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் சுமார் 115 புள்ளி 8 அடியாக இருந்தது. விரைவில் முழு கொள்ளளவான 120 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00