முழுக்‍க முழுக்‍க மண்ணால் கட்டப்பட்ட சிறப்பு கொண்ட பவானி அணை - இன்றுடன் 65வது ஆண்டில் கால்பதிக்‍கிறது

Aug 19 2019 12:58PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஆசியாவிலேயே மிகப்பெரிய மண் அணை என்ற பெருமை கொண்ட பவானிசாகர் அணைக்கு இன்று 65-வது பிறந்தநாள்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணை, தஞ்சையின் டெல்டா பாசனத்திற்கு அடுத்தபடியாக மிகப்பெரிய பாசனப்பரப்பை கொண்டது. ஆசியாவிலேயே மண்ணால் கட்டப்பட்ட மிகப்பெரிய அணை என்ற பெருமையை பெற்றது. 1948-ல், பத்தரை கோடி ரூபாய் மதிப்பில் பவானி ஆறும், மாயாறும் ஒன்று சேருமிடத்தில், பவானிசாகர் அணை கட்டும் பணி தொடங்கப்பட்டது. இந்த அணை கட்டும் பணியில் ஆயிரக்கணக்கான கிராம மக்கள் ஈடுபடுத்தப்பட்டனர். 19 மதகுகள் கொண்ட பவானி சாகர் அணை கட்டும் பணி 7 ஆண்டுகளாக நடைபெற்றது. பின்னர் 1955-ம் ஆண்டு ஆகஸ்ட் 19-ம் தேதி அன்றைய முதலமைச்சர் காமராசரால் திறந்து வைக்கப்பட்டது. இந்த அணையின் கட்டுமானத்தை, அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு உள்ளிட்ட தலைவர்கள் பார்வையிட்டுச் சென்றனர். 120 அடி உயரம் கொண்ட இந்த அணையில், 32 புள்ளி 8 டி.எம்.சி. வரை தண்ணீரை தேக்கி வைக்கலாம். இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களிலுள்ள கீழ்பவானி பிரதான வாய்க்கால் மூலம் சுமார் 2 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணை கட்டப்பட்டது முதல் இதுவரை 6 முறை அணை முழுவதுமாக நிரம்பி, உபரிநீர் வெளியேற்றப்பட்டுள்ளது.

தமிழகத்தின் மிகப்பெரிய அணைகளில் பவானி அணையும் குறிப்பிடத்தக்‍க ஒன்றாகும். சுற்றுலாப் பயணிகளும் அதிக அளவில் வந்து இதனை பார்த்துச் செல்லும் சிறப்பு கொண்டதாக பவானி அணை திகழ்கிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00