தஞ்சையில் நடைபெற்ற ஒருங்கிணைந்த மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் - அ.ம.மு.க. பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் நியமிக்‍கப்பட்டதற்கு வரவேற்பு தெரிவித்தல் உள்ளிட்ட 9 தீர்மானங்கள் நிறைவேற்றம்

Aug 19 2019 3:13PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட கழக நிர்வாகிகளின் ஆலோசனைக்கூட்டம் தஞ்சையில் நடைபெற்றது. கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு முக்‍கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாண்புமிகு அம்மாவின் திருவுருவத்தையும், மக்கள் நல கொள்கைகளையும் இதயத்தில் ஏந்தி, லட்சியப்பயணம் மேற்கொண்டிருக்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் தஞ்சை தமிழரசி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கழக துணைப்பொதுச்செயலாளர் திரு.ரெங்கசாமி, கழக அவைத்தலைவர் திரு.அன்பழகன், தலைமை நிலைய செயலாளர் திரு.திருச்சி மனோகரன், கழக அமைப்பு செயலாளர்கள் திரு.தேவதாஸ், திரு.பாஸ்கர், திரு.சிவா. ராஜமாணிக்கம், கழக கொள்கைப்பரப்பு செயலாளர் செல்வி சி.ஆர்.சரஸ்வதி, மாநில கழக இளைஞரணி செயலாளர் திரு.டேவிட் அண்ணாதுரை, மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் திரு.வேலு.கார்த்திகேயன், தஞ்சை மாநகர் மாவட்ட கழகச்செயலாளர் திரு.ராஜேஷ்வரன், தஞ்சை தெற்கு மாவட்ட கழகச்செயலாளர் திரு.சேகர், திருவாரூர் மாவட்ட கழகச்செயலாளர் திரு.காமராஜ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரனுக்கு ஆளுயர மலர்மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு வைக்‍கப்பட்டிருந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் மாண்புமிகு அம்மா திருவுருவப் படங்களுக்‍கு திரு.டிடிவி தினகரன் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து திரு.டிடிவி தினகரனுக்‍கு தஞ்சை தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் திரு.சேகர், வாள் ஒன்றை பரிசாக அளித்தார்.

இதனைத்தொடர்ந்து, திரு.டிடிவி தினகரன் தலைமையில் ஆலோசனைக்‍ கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தஞ்சாவூர் வடக்கு மாவட்டம், தஞ்சாவூர் தெற்கு மாவட்டம் மற்றும் தஞ்சாவூர் மாநகர் மாவட்ட கழகங்களை சேர்ந்த நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி, கிளை, வட்டக்கழகம் மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர். கழக வளர்ச்சிப் பணிகள் குறித்து இதில் ஆலோசிக்‍கப்பட்டன. மேலும் பல்வேறு முக்‍கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானங்கள் நிறைவேற்றம்

தஞ்சையில் நடைபெற்ற ஒருங்கிணைந்த மாவட்ட கழக செயல்வீரர்கள் கூட்டத்தில் அ.ம.மு.க. பொதுச் செயலாளராக திரு.​டிடிவி தினகரன் நியமிக்‍கப்பட்டதை வரவேற்பது உள்ளிட்ட பல்வேறு முக்‍கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தஞ்சை வடக்‍கு மற்றும் தெற்கு, தஞ்சை மாநகர் மாவட்ட கழக செயல்வீரர்கள் கூட்டம், கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் தலைமையில், தஞ்சையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில் 9 முக்‍கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்‍கூட்டத்தில், அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகத்தின் பொதுச்செயலாளராக திரு. டிடிவி தினகரன் நியமனம் செய்யப்பட்டதை ஏகமனதாக வரவேற்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதேபோல், கழக துணை பொதுச்செயலாளராக தஞ்சை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. எம். ரெங்கசாமியை நியமனம் செய்த, தியாகத்தலைவி சின்னம்மாவுக்‍கும், கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரனுக்‍கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்‍கும், ஹைட்ரோகார்பன் மற்றும் மீத்தேன் திட்டங்களுக்‍கு எதிராக போராடி வரும் திரு. டிடிவி தினகரனுக்‍கு நன்றி தெரிவித்தல்;

நடந்து முடிந்த தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தலில் துணைத் தலைவராக போட்டியிட்டு வெற்றி பெற்ற கழக வழக்‍கறிஞர் திரு. வேலு கார்த்திகேயனுக்‍கு பாராட்டு ஆகியன தொடர்பாகவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், தமிழக மாணாக்‍கர்களின் நலனை பாதுகாக்‍கின்ற வகையில், புதிய கல்வி கொள்கையில் திருத்தம் செய்ய மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துதல்;

தஞ்சை வடக்‍கு, தெற்கு, மாநகர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளிலும் அதிகப்படியான கழக உறுப்பினர்களை சேர்த்து வளர்ச்சி பணிகளில் தீவிரமாக ஈடுபடுவது;

கழக வளர்ச்சிக்‍காக அல்லும் பகலும் அயராது பாடுபட்டு வரும் கழக பொதுச்செயலாளருக்‍கு பாராட்டு;

தமிழகத்தில் ஆவின் பால் விலையினை லிட்டருக்‍கு 6 ரூபாய் உயர்த்திய தமிழக அரசுக்‍கு கண்டனம் மற்றும் விவசாயிகளின் கடன்களை உடனடியாக ரத்து செய்யவும், அனைத்து ஆறு, குளம் ஏரி வாய்க்‍கால்களை உடனடியாக தூர்வாரவும் அரசை வலியுறுத்தி இக்‍கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00