முல்லை பெரியாறு அணை மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கு - கேரள அரசிற்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

Aug 20 2019 3:34PM
எழுத்தின் அளவு: அ + அ -
முல்லை பெரியாறு அணை மற்றும் அதன் நீர்ப்பிடிப்பு பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கில் கேரள அரசிற்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு பணிக்கு மத்திய காவல்துறை படையை நியமனம் செய்யக்கோரியும், அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான 132 அடி முதல் 152 அடி வரையுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிடக்கோரியும் என தமிழக பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர் சங்க மாநில துணைத் தலைவர் விஜயகுமார் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கினைத் தாக்கல் செய்தவர் இறந்துவிட்ட காரணத்தால், தமிழக பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர் சங்க மாநில முன்னாள் தலைவர் ரெங்கன் என்பவரை இந்த வழக்கில் சேர்க்கக் கோரினார். அதனை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர். மேலும், 152 அடி வரை ஆக்கிரமிப்புகள் இருப்பதாக மத்திய அரசின் ரகசிய அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கேரள அரசிற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை 2 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00