வளி மண்டல மேல் அடுக்கில் காற்று சங்கமத்தின் காரணமாக வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

Aug 20 2019 3:35PM
எழுத்தின் அளவு: அ + அ -
வளி மண்டல மேல் அடுக்கில் காற்று சங்கமத்தின் காரணமாக, வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில், மழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்‍குநர் திரு. புவியரசன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திரு. புவியரசன், தருமபுரி, சேலம், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்‍கு வாய்ப்புள்ளதாக கூறினார்.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல், மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறினார்.

கடந்த 24 மணி நேரத்தில், திருச்சியில் 13 சென்டி மீட்டர் மழையும், கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை, சேலம் வாழப்பாடியில் தலா 8 சென்டி மீட்டர் மழையும், பெரம்பலூரில் 7 செ.மீ.மழையும் பதிவாகியுள்ளது.

ஜூன் ஒன்றாம் தேதிமுதல், இதுவரை தமிழகத்தில் சராசரியாக 18 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. சென்னையை பொறுத்தவரை, 33 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இது இயல்பைவிட 5 சென்டி மீட்டர் அதிகமாகும்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00