கர்ப்பிணி பெண்ணுக்‍கு ஹெச்ஐவி தொற்று ரத்தம் ஏற்றப்பட்டதாக புகார் - அரசு மருத்துவக்‍ கல்லூரி முதல்வர் மறுப்பு

Aug 20 2019 5:10PM
எழுத்தின் அளவு: அ + அ -
மதுரை உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில், கர்ப்பிணி பெண்ணுக்‍கு எச்.ஐ.வி தொற்றுள்ள ரத்தம் ஏற்றப்பட்டதாக எழுந்த புகாருக்‍கு, மருத்துவ கல்லூரி முதல்வர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

உசிலம்பட்டியை சேர்ந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர், உடல் பரிசோதனைக்காக கடந்த 17-ஆம் தேதி, உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு வந்தபோது, ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியதை அடுத்து, ரத்தம் ஏற்றப்பட்டுள்ளது. சிறிது நேரத்தில், அவரது உடலில் அரிப்பு ஏற்பட்டு முகம், கை கால் வீங்கியதாக கூறப்படுகிறது. இதனை கண்ட அவரது பெற்றோர், அவருக்கு எச்.ஐ.வி தொற்றுள்ள ரத்தம் ஏற்றப்பட்டதாக, குற்றம் சாட்டினர். பின்னர், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில், கர்ப்பிணி பெண்ணுக்‍கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், ஹெச்ஐவி தொற்று இல்லை என்பது, உறுதி செய்யப்பட்டதாக, மருத்துவ கல்லூரி முதல்வர் வனிதா தெரிவித்துள்ளார். வீண் வதந்தியை நம்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்‍ கொண்டார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3625.00 Rs. 3877.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.40 Rs. 50000.00
மும்பை Rs. 50.40 Rs. 50000.00
டெல்லி Rs. 50.40 Rs. 50000.00
கொல்கத்தா Rs. 50.40 Rs. 50000.00