கும்பகோணம் அருகே கோவிலின் முன் உள்ள அரசு மதுபானக் கடையை அகற்றக் கோரி ஆர்பாட்டம் - பெண்கள் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் கைது

Aug 20 2019 5:14PM
எழுத்தின் அளவு: அ + அ -
கும்பகோணம் அருகே கோவிலின் முன் உள்ள அரசு மதுபானக் கடையை அகற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

ராகு பரிகார தலமான திருநாகேஸ்வரம் கோவிலின் முன், தமி்ழக அரசின் மதுபானக் கடை இயங்கி வருகிறது, இங்கு மது அருந்த வரும் குடிமகன்கள், அப்பகுதி வழியே செல்லும் பெண்களை கிண்டல் செய்வதும், கையை பிடித்து இழுப்பது போன்ற இழிவான செயல்களை செய்து வருவதாக அப்பகுதி பெண்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் அருகே உள்ள வங்கியில் இருந்து பணம் எடுத்து வருவோரிடம் வழிப்பறி செய்யப்படுவதாகவும் பல முறை புகார் எழுந்துள்ளது. இதனை கண்டித்தும், அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், திருநாகேஸ்வரம் பேரூராட்சி அலுவலகம் அருகே, ராகு பகவான் போன்று வேடமிட்ட நபரிடம் பொதுமக்கள் மனு அளிப்பது போன்று நூதன கண்டன ஆர்பாட்டம் நடத்தினர். ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்களை காவல்துறையினர் கைது செய்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதேப்போல டாஸ்மாக் ஊழியர்களுக்கு வழங்கப்படும் தொகுப்பூதிய முறையை மாற்றி சட்டப்படியான காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் சங்கத்தினர் சென்னை எழும்பூர் டாஸ்மாக் தலைமை அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00