ராணுவ தொழிற்சாலைகளை தனியார் மயமாக்குவதற்கு எதிராக போராட்டம்- திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை, அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை ஊழியர்கள் வேலை நிறுத்தம்

Aug 20 2019 5:35PM
எழுத்தின் அளவு: அ + அ -
பாதுகாப்பு தளவாடங்களை உற்பத்தி செய்யும் படைகலன் தொழிற்சாலைகளை கார்ப்பரேஷன் மயமாக்‍கும் மத்திய அரசின் நடவடிக்‍கையைக்‍ கண்டித்து, திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை ஊழியர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முப்படைகளுக்கும் பாதுகாப்பு தளவாடங்களை உற்பத்தி செய்யும் இந்தியாவில் உள்ள 41 பாதுகாப்புத்துறை தொழிற்சாலைகளை, மத்திய பாஜக அரசு 100 நாள் திட்டம் என்ற முறையில் கார்ப்பரேஷன் மயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து துப்பாக்கி தொழிற்சாலை மற்றும் கனரக உலோக ஊடுருவி தொழிற்சாலை ஊழியர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்ட நிலையில், இன்று திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் பணிபுரியும் ஆயிரத்து 700 தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோன்று திருச்சியில் உள்ள கனரக உலோக ஊடுருவி தொழிற்சாலையில் பணிபுரியும் 900 ஊழியர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். துப்பாக்கி தொழிற்சாலை முன்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் போராட்டத்திற்கு அனுமதி மறுத்ததால், சாலையில் அமர்ந்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00