மதுரையில் நடைபாதை ஆக்கிரமிப்பு தொடர்பாக அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்ய கோரியவருக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

Aug 20 2019 7:56PM
எழுத்தின் அளவு: அ + அ -
மதுரை மாவட்டம், புதுத்தாமரைப்பட்டியில் நடைபாதை ஆக்கிரமிப்பு தொடர்பாக அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்ய கோரியவருக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை ராஜகம்பீரத்தில் மெட்ரிகுலேஷன் பள்ளி நடத்தி வரும் பாண்டியராஜன் என்பவர் மீது நடைபாதை ஆக்கிரமிப்பு தொடர்பாக மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர், நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த நோட்டீசை ரத்து செய்யக்கோரி பாண்டியராஜன் தரப்பிலிருந்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவின் முந்தைய விசாரணையின் போது, மனுதாரரின் ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, 2 வாரத்திற்குள் தலா 15 ஆயிரம் ரூபாய் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி மீண்டும் அரசு நோட்டீஸ் அனுப்பிய நிலையில், இதனை ரத்து செய்யக்கோரி பாண்டியராஜன் மீண்டும் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ரவிச்சந்திர பாபு, செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு, மனுதாரருக்கு ரூபாய் 1 லட்சம் அபராதம் விதித்தும், அதனை 2 வாரங்களுக்குள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் உள்ள இலவச சட்ட பணிகள் ஆணைய குழுவிடம் செலுத்தவும் உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00